டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்

வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்

கொரோனா பிரச்னையால் கார் மார்க்கெட் பலத்த அடி வாங்கி இருக்கிறது. கடந்த 4 மாதங்களாக விற்பனையில் பெரும் வீழ்ச்சி இருப்பதால், மீட்டு எடுப்பதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. தள்ளுபடிகள், சிறப்பு கடன் திட்டங்கள் என பல திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்

அந்த வகையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு புதிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி, கார் வாங்கி முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.9,999 என்ற மாதத் தவணை செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு, மீதமுள்ள கடன் தொகை சரிவிகித மாதத் தவணைக்கு மாறும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்

இதேபோன்று, வாடிக்கையாளர்களின் நிதி நெருக்கடியை தவிர்க்கும் விதத்தில், முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை இல்லா கடன் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கார் வாங்கி மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை கட்டும் அவசியம் இல்லை. அதன்பிறகு, கடன் தொகை சமவிகித மாதத் தவணைகளாக கணக்கிட்டு கட்ட வேண்டி இருக்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்

முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை இல்லா கடன் திட்டமானது டொயோட்டா நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் கொடுக்கப்படுகிறது. வெல்ஃபயர் எம்பிவி காருக்கு மட்டும் இந்த திட்டம் பொருந்தாது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்

மேலும், டொயோட்டா க்ளான்ஸா மற்றும் யாரிஸ் கார்களுக்கு Buy Back திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு டொயோட்டா டீலரிடமே இந்த கார்களை விற்கும்போது எக்ஸ்ஷோரூம் விலையில் 55 சதவீதம் வரை ரீசேல் மதிப்பு பெற முடியும்.

இதுதவிர்த்து, டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், போலீசாருக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அடங்கிய திட்டங்களையும் டொயோட்டா வழங்குகிறது. ரூ.15,000 நேரடி தள்ளுபடியும், பழைய வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய டொயோட்டா கார் வாங்குவோருக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.17,500 சிறப்பு சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
Toyota Kirloskar Motors introduces new finance schemes for select models in the market. The new scheme includes Low monthly installments, a guaranteed buy-back policy and a three-month moratorium.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X