ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

ஹூண்டாய் ஐ20, இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்ல போனால் இத்தகைய கார் பிரிவை ஐ20 மாடலின் மூலமாகவே இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

அதன்பின்னரே மாருதி பலேனோ விற்பனைக்கு வந்தது. அதன்பின் விற்பனையில் பலேனோ முதலிடத்தை பிடித்தது. இருப்பினும் ஹூண்டாய் ஐ20 இரண்டாவது தொடர்கிறது.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

ஐ20 மூன்றாம் தலைமுறை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து விதங்களிலும் ஐ20 மாடல் மூன்றாம் தலைமுறையில் மேம்படுத்தப்பட்டாலும், இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் அதிகப்படியான விலை சில வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

இதன் காரணமாக சில மாதங்களில் ஐ20 விற்பனையில் மூன்றாவது இடத்திற்கு கூட தள்ளப்படுகிறது. அதற்கு ஒரு உதாரணமாக, கடந்த 2021 ஜூனில் டாடா அல்ட்ராஸின் விற்பனை ஐ20-ஐ விட அதிகமாகும். 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20 மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (O) என்ற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

இவற்றுடன் எரா என்ற பெயரில் புதிய மலிவு வேரியண்ட் ஒன்றையும் ஐ20-இல் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய மலிவு வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது.

இது குறித்து ஆட்டோட்ரெண்ட் டிவி என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள காரின் முன் க்ரில் பியானோ கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

அதேநேரம் முன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்பிலும் கருப்பு நிறத்தை பார்க்க முடிகிறது. ஃபாக் விளக்குகள் பொருத்தப்படவில்லை. சக்கரங்கள் சிறியதாக 14 இன்ச்சில், இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் ஐ20-இன் மேக்னா வேரியண்ட்டில் 15 இன்ச்சிலும், டாப் வேரியண்ட்களில் 16 இன்ச்சிலும் சக்கரங்களை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

சைடு டர்ன் இண்டிகேட்டர்கள் பின்பக்கத்தை காட்டும் மேனுவல் பக்கவாட்டு இறக்கை கண்ணாடிகளுக்கு பதிலாக முன் ஃபெண்டரில் பொருத்தப்பட்டுள்ளன. கைப்பிடிகள் காரின் நிறத்திலேயே தொடரப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் டெயில்லைட்கள் எல்இடி தரத்தில் இல்லை.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

எந்தவொரு ஆடியோ அமைப்பையும் கொண்டில்லாவிடினும், மேற்கூரையில் ஆண்டெனாவை ஐ20-இன் புதிய எரா வேரியண்ட் பெற்றுள்ளது. உட்புறத்தில் டேஸ்போர்டு கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங் சக்கரத்தில் ‘மறுஅமைப்பு' மற்றும் ‘ட்ரிப்'-பிற்கு என மிகவும் சில கண்ட்ரோல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

ஸ்டேரிங் அட்ஜெஸ்ட்மெண்ட் வழங்கப்படவில்லை. அதேபோல் மைய லாக்கும் இந்த விலை குறைவான ஐ20 காரில் இல்லை. கதவு ஜன்னல்களில் பவர் கண்ணாடிகள் முன்பக்கத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பின் இருக்கை பயணிகள் ஜன்னல் கண்ணாடிகளை மேனுவலாகவே அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்!! என்னென்ன வசதிகள் இருக்காது? முழு விபரம்

தற்சமயம் ஹூண்டாய் ஐ20 காரில் மூன்று விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. ஆனால் புதிய ஐ20 எரா வேரியண்ட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் மட்டுமே (1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இல்லை) தேர்வுகளாக கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 Hyundai i20 ERA Base Variant Detailed First Look – Interiors, Exteriors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X