இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

நாட்டில் அதிகம் விற்பனையாகும் குறைந்த விலை கார் மாடல் எது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். டாப் 3 மூன்று கார்கள் பற்றிய தகவலே இதில் வழங்கப்பட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதுமட்டுமின்றி புதிய வாகனங்களின் விலையும் அண்மைக் காலங்களாக உயர்ந்து வருகின்றது. இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலும் நாட்டில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் ஆரம்ப நிலை கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாட்டில் அதிகம் விற்பனையாகும் டாப் மூன்று ஆரம்ப நிலை கார் மாடல்கள் எது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

மாருதி ஆல்டோ:

அதிகம் விற்பனையாகும் குறைந்த விலை மற்றும் ஆரம்ப நிலை கார் மாடல்களில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ காருக்கே முதல் இடம். 2021 ஜூன் மாதத்தில் மட்டும் 12,513 யூனிட் ஆல்டோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 7,298 யூனிட் ஆல்டோக்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

இதைக் காட்டிலும் நடப்பாண்டில் கிடைத்திருப்பது 71 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். பொதுமுடக்க விதிகள் நடைமுறையில் இருந்த காலத்திலும் நல்ல விற்பனை வளர்ச்சியை ஆல்டோ பெற்றிருக்கின்றது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. காரின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்கள் பற்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

டாடா டியாகோ

நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஆரம்பநிலை கார் மாடலில் இரண்டாவது இடத்தை டாடா டியாகோ பிடித்திருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 4,881 யூனிட் டியாகோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதுவே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பார்த்தோமேயானால் 4,069 யூனிட் டியாகோ மட்டுமே விற்பனையாகியிருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

நடப்பாண்டில் 20 சதவீத விற்பனை வளர்ச்சியை டியாகோ பெற்றிருக்கின்றது. இந்த காரை மிக விரைவில் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்க டாடா திட்டமிட்டுள்ளது. தற்போது 1.2 லிட்டர் ரெவ்ட்ரோன் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டாடா டியாகோ குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

ரெனால்ட் க்விட்

நம்முடைய பட்டியலில் மூன்றாவது மற்றும் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது ரெனால்ட் க்விட் கார். ஆரம்ப நிலை கார் மாடலாக கிடைக்கும் க்விட்டிற்கு பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 2,161 யூனிட் க்விட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் விலை குறைவான கார் எது தெரியுமா? டாடா டியாகோவுக்கே இரண்டாவது இடம்தான்!

இது 2020 ஜூன் மாமதத்தைக் காட்டிலும் 11 சதவீத குறைவான விற்பனையாகும். இருப்பினும், நாட்டின் அதிகம் விற்பனயாகும் ஆரம்ப நிலை மாடலில் க்விட் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. 2020 ஜூன் மாதத்தில் 2,441 யூனிட் க்விட் கார்கள் விற்பனையாகியிருந்தன. லாக்டவுண் போன்ற கடுமையான காரணங்களால் இந்த காரின் விற்பனை லேசாக சரிந்திருக்கின்றது.

Most Read Articles

English summary
2021 June Top-3 Selling Entry-Level Cars In India. Read In Tamil.
Story first published: Sunday, July 18, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X