ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்இ & ஈக்கோஸ்போர்ட் எஸ் கார்களை விளம்பரப்படுத்தும் புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவை ஃபோர்டு இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஈக்கோஸ்போர்டின் புதிய வெர்சனை எஸ்இ என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன் கிடையாது, சில தோற்ற மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்ட ஸ்பெஷல் எடிசனாகும்.

ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

இந்த புதிய எடிசன் காரில் முக்கிய மாற்றமாக ஈக்கோஸ்போர்ட் கார்களின் அடையாளமாக பின்பக்க கதவில் வழங்கப்படும் ஸ்பேர் சக்கரம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான் ஈக்கோஸ்போர்ட் எஸ் மற்றும் ஈக்கோஸ்போர்ட் எஸ்இ என்ற இரு கார்களை நம்மால் வித்தியாசப்படுத்த முடிகிறது.

Image Courtesy: The Fat Biker

இதனை வாடிக்கையாளர்களுக்கு கூறும் விதத்திலேயே தற்போது இந்த டீசர் வீடியோவினை ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்சமயம் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிப்பரப்பப்பட்டு வரும் இந்த டிவிசி வீடியோவினை பலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள் தங்களை வேறுப்படுத்தி காட்ட ஏதாவது ஒரு விஷயம் வராதா என காத்து கொண்டிருக்கும்போது, அவர்களுக்காகவே கொண்டுவந்தது போல் ஈக்கோஸ்போர்ட் எஸ் மற்றும் எஸ்இ கார்களை இந்த வீடியோவில் ஃபோர்டு நிறுவனம் காட்டியுள்ளது.

ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

ஸ்பேர் சக்கரம் நீக்கப்பட்டுள்ளதால், பின்பக்கத்தில் கீழ்பகுதியில் வழங்கப்படும் நம்பர் பிளேட் கூடுதல் சக்கரம் வழங்கப்படும் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பம்பரின் அடிப்பகுதி சில்வர் நிற சறுக்கு தட்டை பெற்றுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், பின்பகுதியில் வழங்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தான் புதிய எஸ்இ வேரியண்ட்டை முந்தைய எஸ் வேரியண்ட்டில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகின்றன.

ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

அதேநேரம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையில் உள்ள ஈக்கோஸ்போர்ட் காரின் சில டிசைன் நுட்பங்கள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எஸ்இ வெர்சன், தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய ஈக்கோஸ்போர்ட் வரிசையில் டாப் எஸ் வேரியண்ட்டிற்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி கார் அதிகப்பட்சமாக 122 பிஎஸ் மற்றும் 149 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 பிஎஸ் மற்றும் 215 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஈக்கோஸ்போர்ட் எஸ் vs எஸ்இ கார்கள்... உங்களது தேர்வு எது? புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டது ஃபோர்டு!

இதில் பெட்ரோல் என்ஜின் உடன் புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்இ வேரியண்ட்டின் விலை ரூ.10.49 லட்சமாகவும், டீசல் என்ஜின் உடன் ரூ.10.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford India releases new TVC for EcoSport SE & EcoSport S. Read In Tamil.
Story first published: Friday, March 12, 2021, 23:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X