கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் எஸ் வேரியண்ட்டில் பல கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது. புதிய வரவுகளால் ஏற்கனவே சந்தையில் கோலோய்ச்சி வந்த மாடல்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியும் சந்தைப் போட்டியால் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக தற்காலிக தீர்வுகளை ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் கொடுத்து வருகிறது ஃபோர்டு நிறுவனம். அண்மையில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்இ என்ற வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த மாடல் வந்தது.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டைட்டானியம் எஸ் வேரியண்ட்டிலும் இப்போது கூடுதல் வசதிகளையும், சிறப்பம்சங்களையும் வழங்க ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியானத் தகவல் தெரிவிக்கிறது.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

அதாவது, ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்டில் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகள் வழங்கப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. ஹெட்லைட் க்ளஸ்ட்டருக்கு கீழாக புதிய எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

அதேபோன்று, புதிய பொலிவும் கொடுக்கப்பட உள்ளது. முன்புற பம்பர் டிசைன், புதிய அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகளுடன் புதிய பொலிவுடன் இந்த வேரியண்ட் வர இருக்கிறது. அதேபோன்று, புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

ஆனால், இதுகுறித்த உறுதியானத் தகவல்கள் இல்லை. இந்த புதிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்டை அதிக மதிப்புடையதாக மாற்றும் என்றும், வாடிக்கையாளர்களை கவரும் என்றும் ஃபோர்டு நம்புகிறது.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 149 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையம், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

கூடுதல் வசதிகளுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ரூ.8.19 லட்சம் முதல் ரூ.11.69 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், எஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிற்பபம்சங்கள் சேர்க்கப்படும் என்பதால் அதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
According to report, Ford Ecosport S Variant expected to get new updates in India soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X