மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

மஹிந்திரா நிறுவனத்தின் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவாக வடிவமைக்கப்பட்ட முதல் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல் என்ற பெருமை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு உண்டு. வந்த புதிதில் விற்பனையில் தூள் கிளப்பியது. மேலும், மிக சவாலான விலையில் அதிசிறந்த தேர்வாகவும் மாறியது. ஆனால், தொடர்ந்து இந்த செக்மென்ட்டில் வந்த பல புதிய மாடல்கள் காரணமாக, வாடிக்கையாளர் தேர்வில் பின்தங்கியது. மேலும், 2017ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் இருந்து வருகிறது.

மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

இந்த நிலையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டர்போ பெட்ரோல் எஞ்சின் இருந்த நிலையில், போதிய வரவேற்பு இல்லாததால் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது

மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

தற்போது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 122 எச்பி பவரையும், 149 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 எச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு எஞ்சின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் உள்ளது.

மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

இந்த சூழலில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சென்னை ஃபோர்டு ஆலை அருகே இரண்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார்கள் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த இண்டியன் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

இந்த இரண்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளில் ஒன்று ட்ரென்ட் என்ற வேரியண்ட்டிலும், மற்றொன்று எஸ் வேரியண்ட் என்பதும் தெரிய வந்தது. இந்த இரண்டு வேரியண்ட் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளிலும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

மேலும், இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினை மஹிந்திரா பொருத்தி காட்சிப்படுத்தி இருந்தது.

மஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்?

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்-ஸ்டாலியன் குடும்ப வரிசையை சேர்ந்த இந்த 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 130 எச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதே எஞ்சின்தான் விரைவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியிலும் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், பின்னர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் ஈக்கோஸ்போர்ட் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
According to report, Ford is planning to launch new Ecosport variants with turbo petrol engine in India soon.
Story first published: Tuesday, February 9, 2021, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X