ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் காரின் டைட்டானியம் வேரியண்ட்டை புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களுடன் அப்டேட் செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஸ்பை படத்தினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

2021 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் கடந்த ஜனவரி மாதத்தில் சில குறிப்பிட்ட அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்டேட்டின்படி ஈக்கோஸ்போர்ட் மாடலின் டைட்டானியம் ட்ரிம் சன்ரூஃப் வசதியினை பெற்றது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

இந்த நிலையில் தற்போது ஈக்கோஸ்போர்டின் டைட்டானியம் ட்ரிம்-மிற்கு மற்றொரு அப்டேட்டாக புதிய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வெளிக்காட்டும் விதத்தில் டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் இணையத்தில் கசிந்துள்ள படத்தினை தான் கீழே காண்கிறீர்கள்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

இந்த புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் எஸ் வேரியண்ட்டில் இருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த வேரியண்ட்டில் தான் இத்தகைய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

இருப்பினும் டைட்டானியம் வேரியண்ட்டின் பெட்ரோல் மாடல்கள் மட்டுமே இந்த புதிய அலாய் சக்கர அப்டேட்டை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் டைட்டானியம் டீசல் மாடல்கள் வழக்கமான அலாய் சக்கரங்களையே தொடர்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

இதற்கிடையில் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஈக்கோஸ்போர்ட் மாடலுக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்க ஃபோர்டு நிறுவனம் தயாராகி வருகிறது. ஏனெனில் ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதை சமீப காலமாக பார்த்து வருகிறோம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

ஃபோர்டின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய முன் பம்பர், புதிய L-வடிவிலான பகல்நேர விளக்குகள் மற்றும் சதுர வடிவிலான குழியை கொண்ட ஃபாக் விளக்குகளை பெற்று வரவுள்ளதை ஸ்பை படங்களில் பார்த்திருந்தோம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

அதுமட்டுமில்லாமல் புதிய 5-ஸ்போக் அலாய் சக்கரங்களையும் ஈக்கோஸ்போர்ட் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் பெற்றுவரவுள்ளதை ஸ்பை படங்களில் இருந்து அறிந்திருந்தோம். தற்சமயம் இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய ஈக்கோஸ்போர்ட் மாடலில் இரு என்ஜின் தேர்வுகளை வழங்கி வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

இதில் 1.5 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 120 பிஎச்பி மற்றும் 149 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் நிலையாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் காரில் புதிய அலாய் சக்கரங்கள்!! ஷோரூம்களை வந்தடைந்தன

அதேநேரம் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.19 லட்சத்தில் இருந்து ரூ.11.70 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Ford EcoSport Titanium petrol gets alloys from S variant.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X