ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் தற்போது கிடைத்துள்ள இந்த ஸ்பை படங்களில் ஓரளவிற்கு காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களை கவனிக்க முடிகிறது. ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் என்பதால் முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

மற்றப்படி பக்கவாட்டு மற்றும் பின்பகுதி, தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஈக்கோஸ்போர்ட் காரையே ஒத்து காணப்படுகிறது. முன்பக்கத்தில் புதிய எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் முன் பம்பருக்கு இரு முனைகளிலும் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

ஹெட்லைட் பகுதி இந்த ஸ்பை படங்களில் சற்று வித்தியாசமாக தெரிவதால், இன்னோரு டிஆர்எல் தொகுப்பை கொண்டிருக்கலாம் (இந்த சோதனை மாதிரிகளில் மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கலாம்). முன் க்ரில் தடிமனான பார்டர் உடன் அப்டேட் செய்யப்பட்டது போல் தோற்றமளிக்கிறது.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

மேலும் இந்த ஸ்பை படங்களில் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. தற்சமயம் போட்டி மிகுந்ததாக விளங்கும் இந்திய காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் கடந்த 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

கிட்டத்தட்ட 10 வருடங்களாக விற்பனையில் இருக்கும் போதிலும், இத்தனை வருடங்களில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ஃபோர்டு நிறுவனம் வழங்கிய தோற்ற மாற்றங்கள் என்று பார்த்தால், மிகவும் சில மாற்றங்கள் மட்டுமே உள்ளன.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

உட்புற கேபினிலும் இதே கதைதான். இதனாலேயே ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பலரும் எதிர்பார்த்துள்ளனர். பிரிவில் நிலவிவரும் கடுமையான போட்டியினை கருத்தில் கொண்டு இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் முன்பக்க தோற்றத்தை இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் திருத்தியமைத்துள்ளது.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

அதேநேரம் உட்புறத்தில் புதிய சிங்க் 3 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அப்டேட் செய்யப்பட்ட டிசைனில் டேஸ்போர்டு உள்ளிட்ட தொழிற்நுட்ப வசதிகளையும் கொண்டுவரவுள்ளது. என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில், ஃபோர்டு நிறுவனம் இந்த காரில் வழங்கிவரும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் அமைப்பை திருத்தியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

இதனால் ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரில் தற்சமயம் வழங்கப்பட்டு வரும் பெட்ரோல் & டீசல் என்ஜின்கள் காருக்கு வழங்கும் ஆற்றல்கள் சற்று மாறுப்படலாம். விற்பனையில் உள்ள ஈக்கோஸ்போர்ட்டில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 121 பிஎச்பி மற்றும் 149 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

ஈக்கோஸ்போர்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா கொண்டுவரும் ஃபோர்டு!! சாலை சோதனைகள் துவங்கியது!

இவை இரண்டுடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையான டிரான்ஸ்மிஷன் தேர்வாகவும், பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் பழமையான காராக மாறிவிட்டதால், இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வருகை தருவதற்கு இதுவே சரியான தருணம்.

Most Read Articles

English summary
New Ford EcoSport facelift begins testing in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X