Just In
- 2 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 3 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 5 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 6 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 ஆண்டின் நாட்டின் சிறந்த கார் எது தெரியுமா?.. டாடா அல்ட்ராஸ் காரையே ஓரம் கட்டிய ஹூண்டாய் தயாரிப்பு!!
டாடா நிறுவனத்தின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட அல்ட்ராஸ் காரை பின்னுக்கு தள்ளி ஹூண்டாய் நிறுவனத்தின் ஓர் தயாரிப்பு சிறந்த கார் என்ற பட்டத்தை வென்றிருக்கின்றது. இந்த கார்குறித்த சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதுமுக கார்களில் ஐ20 காரும் ஒன்று. இந்த காரே 2021 ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் என்ற விருதைத் தட்டிச் சென்றிருக்கின்றது. தற்போது விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் மஹிந்திரா தார், கியா சொனெட், ஹூண்டாய் க்ரெட்டா, ஹோண்டா சிட்டி மற்றும் டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட கார்களை பின்னுக்கு தள்ளி இந்த விருதை அக்கார் பெற்றிருக்கின்றது.

இப்போட்டியில், மேற்கூறிய கார்கள் மட்டுமின்றி ஹூண்டாய் அவ்ரா, கியா கார்னிவல் மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய அதிக லக்சூரி வசதிகள் கொண்ட கார்களும் கலந்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கார்களையே ஹூண்டாய் ஐ20 ஓரம் கட்டிவிட்டு 2021 ஆண்டிற்கான நாட்டின் சிறந்த கார் (Indian Car of the Year 2021) என்ற விருதை அது வென்றிருக்கின்றது.

ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐ20 காரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி அன்றே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இக்காரை கவர்ச்சியான ஸ்போர்ட்ஸ் ரக காரைப் போன்று வடிவமைத்திருக்கின்றது ஹூண்டாய். இத்துடன், எக்கச்சக்க சிறப்பு தொழில்நுட்பம் மற்றும் லக்சூரி அம்சங்களையும் வழங்கியிருக்கின்றது.

எல்இடி புரஜெக்டர் மின் விளக்கு, இசட் வடிவிலான எல்இடி டெயில்லேம்ப், 16 இன்சிலான டயமண்ட் கட் அலாய் வீல், 10.25 இன்சிலான எச்டி தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், நீல நிற ஆம்பிசியன்ட் மின் விளக்கு மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் என எக்கசக்க சிறப்பு வசதிகள் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து, போஷ் நிறுவனத்தின் 7 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், கூலிங் பேட் வசதிக் கொண்ட ஒயர்லெஸ் சார்ஜர், ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட், ப்ளூடூத் இணைப்பு வசதி, ஆக்ஸி பூஸ்டர் ஏர் ப்யூரிஃபையர், ஈகோ கோட்டிங், ஐஎம்டி, ஓடிஏ மேப் அப்டேட்டுகள், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், அவசரகால ஸ்டாப் மற்றும் டிபிஎம்எஸ் என எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

புதிய ஹூண்டாய் ஐ20 கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 83 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்ஜின், 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளியேற்றக்கூடிய 1.0 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 100 பிஎஸ்-240 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர் யு2 சிஆர்டிஐ டீசல் எஞ்ஜின் என இந்த மூவிதமான தேர்வுகளியே கார் கிடைத்து வருகின்றது.

இதுதவிர மேக்னா, ஆஸ்தா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்தா (ஓ) ஆகிய நான்கு விதமான தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 6.80 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 11.33 லட்சம் ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கார், இந்தியாவில் மாருதி பலினோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்ஸா, ஃபோக்வேகன் போலோ ஆகிய கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகின்றது.