201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

இந்தியாவில் விரைவில் 201 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய ஐ20 என் காருடன் செயல்திறன்மிக்க கார்களை கொண்ட 'என்' வரிசையை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

ஹூண்டாய் மோட்டார்ஸின் முதல் என் வரிசை காராக முற்றிலும் புதிய ஐ20 என் இந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகலாம் என ஆட்டோகார் இந்தியா செய்திதளம் தெரிவித்துள்ளது.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

இந்தியாவில் விற்பனையில் உள்ள எந்த ஹேட்ச்பேக் காரும் 201 பிஎச்பி என்ஜின் ஆற்றலில் இயங்கவதில்லை. இந்த சிறப்பை ஹூண்டாய் ஐ20 என் கார் பெறவுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த செயல்திறன்மிக்க காரை முற்றிலும் தயாரிக்கப்பட்ட நிலையில் வருடத்திற்கு 2500 யூனிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

இதனால் இதன் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம். இதே அளவிலான விலைகளில் ஃபோர்டு நிறுவனம் ஃபோக்கஸ் ஆர்எஸ் ஹேட்ச்பேக் காரை அடுத்த 2022ஆம் ஆண்டிற்குள்ளாக இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

அவ்வாறு நடந்தால் ஹூண்டாய் ஐ20 என் காருக்கு ஃபோர்டு ஃபோக்கஸ் ஆர்எஸ் நேரடி போட்டியாக விளங்கும். ஐ20 என் காரில் 1.6 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 201 பிஎச்பி மற்றும் 275 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

இந்த என்ஜின் உடன் வழங்கப்படுகின்ற 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும். காரின் எடை 1200 கிலோவிற்கும் குறைவாக உள்ளதால் 201 பிஎச்பி பவரில் ஐ20 என் காரை அதிகப்பட்சமாக மணிக்கு 230கிமீ வேகத்தில் இயக்க முடியும்.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

இத்தகைய வேகத்தில் இயங்கினால் நிச்சயம் எவர் ஒருவருக்கும் மகிழ்ச்சியான ரைடிங் அனுபவம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் முதல் 100kmph வேகத்தை இந்த காரில் வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிட முடியும்.காரின் செயல்திறனை மேம்படுத்த புதிய, தொடர்ச்சியாக மாறுபடும் வால்வு காலம் (CVVD) தொழிற்நுட்பத்தை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

அதேபோல் அதிக ஆர்பிஎம் மற்றும் டார்க்கை சமாளிக்க வலுவான கியர்பாக்ஸ் டிசைனை ஐ20 என் கார் ஏற்கிறது. இவை மட்டுமின்றி மெக்கானிக்கல் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்சியல் (எம்-எல்சிடி), லாஞ்ச் கண்ட்ரோல் போன்ற தொழிற்நுட்பங்களும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளையும் இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் பொருத்துகிறது.

201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!

நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட், என் மற்றும் என் கஸ்டம் என்ற ஐந்து விதமான ட்ரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்ற ஐ20 என் காரில் வழக்கமான ஐ20 பெட்ரோல் காரை காட்டிலும் கூர்மையான சஸ்பென்ஷன் அமைப்பு, வித்தியாசமான சத்தத்தை வெளிப்படுத்தக்கூடிய எக்ஸாஸ்ட் அமைப்பு வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai i20 N high performance hatchback in the works for India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X