Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 2 hrs ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!
- Finance
கையை நீட்டினால் போதும்.. அமேசானின் புதிய பேமெண்ட் முறை..!
- Lifestyle
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆற்றல்மிக்க காரை இந்தியா கொண்டுவர தீவிரம் காட்டும் ஹூண்டாய்!! ஐ20 என் மீண்டும் சோதனை ஓட்டம்!
ஹூண்டாயின் முதல் என் வரிசை காராக இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஐ20 என் கார் கவர்ச்சிகரமான தோற்றத்தில் நம் நாட்டு சாலையில் காட்சி தந்துள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் ஐ20 கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய சந்தையில் பிரபலமான ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன் இதன் அடுத்த தலைமுறை கார் சற்று அதிகப்படியான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்களில் ஹேட்ச்பேக் கார் விரும்புவோரின் தேர்வுகளுள் முதன்மையானதாக ஐ20 விளங்குகிறது.

மேலும் புதிய தலைமுறை ஐ20-இல் ஆற்றல்மிக்க 1.0 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்ட போதிலும், ஐ20 கார்களின் ஸ்போர்டி பண்பை அதிகப்படுத்தும் விதமாக ஐ20 என்-லைன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இதனால் செயல்திறன்மிக்க ஐ20 என் காரை சமீபத்தில் சோதனை ஓட்டத்தின்போது பார்த்திருந்தோம். இந்த வகையில் தற்போது மீண்டும் ஹூண்டாயின் இந்த என் வரிசை காரின் ஸ்பை படங்கள் ஹரியானாவில் இருந்து ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

செயல்திறன்மிக்க என்ஜின் அமைப்பை பெற்றுவருவது மட்டுமில்லாமல் ஐ20 என் காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றமும் அதற்கு ஏற்றாற்போல் சிறிது மாற்றியமைக்கப்படுகின்றன. இதனால் தான் இந்த ஸ்பை படங்களில் கார் மறைக்கப்படுகிறது.

இவை மட்டுமில்லாமல் ஐ20 என் காரில் சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்ட நிலையில் வெளிநாட்டு சந்தைகளில் வழங்கப்படுகிறது. அதற்காக தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம்.
ஏனெனில் மூடப்பட்ட நிலையில் இந்த ஐ20 என் சோதனை மாதிரிக்கும் விற்பனையில் உள்ள ஐ20 காருக்கும் இடையே வித்தியாசப்படுவது பின்புறத்தில் வழங்கப்படும் இரட்டை எக்ஸாஸ்ட் அமைப்பு மட்டும் தான்.

ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஐ20 என் கார் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அதாவது ஐரோப்பிய ஐ20 என் காரில் வழங்கப்படும் கருப்பு நிற பக்கவாட்டு ஓரங்கள், இரட்டை-நிறத்தில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இந்தியாவிற்கும் வரும் மாடலிலும் வழங்கப்படும்.

வெளிநாடுகளில் ஹூண்டாய் ஐ20 என் கார் அரோரா க்ரே, பித்தளையின் சில்வர், பாண்டோம் கருப்பு மற்றும் பனி துருவத்தின் வெள்ளை (கருப்பு நிற மேற்கூரை உடன்) என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகள் வழக்கப்படுகின்றன.

உட்புற கேபின் ஸ்போர்டி வடிவிலான பக்கெட் இருக்கைகள், என்-பிராண்டின் பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், மெட்டல் பெடல்கள் மற்றும் லெதரால் மூடபட்ட கியர் க்னாப் உள்ளிட்டவற்றுடன் சிவப்பு நிற தொடுதல்களை ஆங்காங்கே பெறுகிறது.

சர்வதேச சந்தைகளில் ஐ20 என் காரில் 1.2 லிட்டர் எம்பிஐ நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஐ20 என் காரின் இந்திய அறிமுகம் குறித்த அறிவிப்பு எதையும் ஹூண்டாய் நிறுவனம் இதுவரையில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.