ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது, மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

இந்திய சந்தையில் கடந்த 2 ஆண்டுகளாக ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு கை மேல் பலனும் கிடைத்து கொண்டுள்ளது. மூன்றாவது தலைமுறை கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகத்தை தொடர்ந்து, எக்ஸ்சென்ட்டுக்கு மாற்றாக அவ்ரா காம்பேக்ட் செடான் காரை ஹூண்டாய் கொண்டு வந்தது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

அத்துடன் வெர்னா மற்றும் டூஸான் ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் கடந்த 2019ம் ஆண்டு வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரையும், கடந்த ஆண்டு புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவியையும் ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதவிர மூன்றாவது தலைமுறை ஐ20 காரையும் ஹூண்டாய் கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

இதை தொடர்ந்து 'என் லைன்' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஹூண்டாய் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த யூகங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் சாலை சோதனை செய்யப்பட்டது. அந்த ஸ்பை படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தன.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

செயல்திறனில் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்பதே இதற்கு காரணம். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் ஹூண்டாய் ஐ20 போட்டியிட்டு வருகிறது. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை 6.80 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.33 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்பட்சத்தில், ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்கின் லைன் அப்பை மேலும் விரிவாக்கும் வகையில், என் லைன் மாடலை டாப் மாடலாக ஹூண்டாய் நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த சூழலில், ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் சாலை சோதனை செய்யப்படும்போது மீண்டும் ஒரு முறை தற்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

எனவே ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 என் லைன், ஓரளவிற்கு மட்டுமே உருமறைக்கப்பட்டிருந்தது. எனவே கருப்பு நிற ஓஆர்விஎம்கள் மற்றும் புதிதாக டிசைன் செய்யப்பட்ட ட்யூயல் டோன் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றை நம்மால் காண முடிகிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது. சர்வதேச சந்தைகளில் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் தேர்வுடனும் கிடைக்கிறது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் இந்தியாவில் மீண்டும் சோதனை... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்?

ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடல் தொடர்ச்சியாக சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருவது, இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது. ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடல் இந்தியாவில் மீண்டும் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான செய்தியை டீம்-பிஎச்பி தளம் தற்போது வெளியிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hyundai i20 N Line Spotted Testing In India - Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, February 17, 2021, 21:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X