பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது

Hyundai i20 N Line இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

Hyundai நிறுவனம் இறுதியாக இந்தியாவில் N Performance பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. i20 N Line மாடலை வெளியிட்டதன் மூலம், இந்தியாவில் N Performance பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் நிறைய N Line மாடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

இதில், i20 N Line முதலாவதாக வந்துள்ள மாடல் ஆகும். Hyundai i20 N Line மாடலின் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் ஸ்போர்ட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது Hyundai i20 N Line மாடலுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி, Hyundai i20 N Line மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

ஆன்லைன் மூலமாகவோ அல்லது Hyundai டீலர்ஷிப்கள் மூலமாகவோ முன்பதிவு செய்ய முடியும். இன்று வெளியிடப்பட்டிருந்தாலும், Hyundai i20 N Line மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் செப்டம்பர் மாதம்தான் Hyundai நிறுவனம் i20 N Line மாடலின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

வெளிப்புறத்தில் ஸ்போர்ட்டியாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுதான், N Line மாடல்களின் மிகப்பெரிய வித்தியாசம் ஆகும். Hyundai i20 N Line மாடலில், 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் Front Brake Calipers சிகப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின் பகுதியை பொறுத்தவரை, ஸ்போர்ட்டியான பம்பர் வழங்கப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

ஆனால் வெளிப்புறத்தில் செய்யப்பட்டுள்ளதற்கு இணையாக கேபினில் பெரிய அளவில் அப்டேட்கள் செய்யப்படவில்லை. Dashboard Layout கிட்டத்தட்ட ஸ்டாண்டர்டு காரை போலவே உள்ளது. எனினும் முழுமையான கருப்பு நிற இன்டீரியர், Red Highlights மூலம் பிரமாதமாக இருக்கிறது. அத்துடன் Red Ambient Lighting-கும் வழங்கப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

அதே சமயம் வசதிகளை பொறுத்தவரை, ஸ்டாண்டர்டு காரில் உள்ள அனைத்து வசதிகளும், i20 N Line மாடலிலும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

மேலும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், Single-pane Sunroof, 7 ஸ்பீக்கர் போஷ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளையும் Hyundai i20 N Line பெற்றுள்ளது. அதே சமயம் இன்ஜினை பொறுத்தவரை, Hyundai i20 N Line மாடலில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வை மட்டுமே Hyundai நிறுவனம் வழங்கியுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

இது 120 ஹெச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 6-speed iMT Gearbox மற்றும் 7-speed DCT Gearbox தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும்போது, i20 N Line மாடலானது, i20 Range-ன் புதிய Top-spec மாடலாக இருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ் தூள் கௌப்பும்.... இந்தியாவில் Hyundai i20 N Line வெளியீடு... செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது!

தற்போதைய நிலையில், Asta(O) Turbo-DCT வேரியண்ட்தான் டாப் மாடலாக உள்ளது. இதன் எக்ஸ் ஷோரும் விலை 11.40 லட்ச ரூபாய் ஆகும். அதே சமயம் N Line மாடலின் விலை 1-1.5 லட்ச ரூபாய் வரை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ விலை வரும் செப்டம்பர் மாதம்தான் அறிவிக்கப்படும்.

Most Read Articles

English summary
Hyundai i20 n line unveiled in india here are all the details
Story first published: Tuesday, August 24, 2021, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X