Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழகம் மட்டுமில்லைங்க ஹூண்டாய் ஐ20 கார்கூட வெற்றி நடைபோடுது... ப்பா இவ்ளோ குறைந்த நாளில் இத்தனை புக்கிங்கா!!
ஹூண்டாய் ஐ20 கார் புக்கிங்கில் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஐ20 காரும் ஒன்று. இக்காரின் புதிய தலைமுறை மாடலையே ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது இந்தியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு என்பதால் தற்போது நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பெற தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். கடந்த நவம்பர் மாதம் இக்கார் விற்பனைக்கு வந்திருந்தாலும் இது அறிமுகமாகி இன்னும் இரு மாதங்கள்கூட ஆகாத நிலையே காணப்படுகின்றது.

இந்தநிலையில் 2020 டிசம்பர் முடிவில் ஒட்டுமொத்தமாக 35 ஆயிரம் யூனிட் ஐ20 கார்களுக்கான புக்கிங்கைத் தான் பெற்றிருப்பதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. கடந்த மாதத்தின் தொடக்கத்தில் சுமார் 10 ஆயிரம் ஐ10 கார் யூனிட்டுகளை டெலிவரி கொடுத்ததாக ஹூண்டாய் கூறியிருந்தது.

இந்த நிலையிலேயே ஒட்டுமொத்தாக அறிமுகமாகி இரு மாதங்கள்கூட ஆகாதநிலையில் 35 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றிருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு ஓர் பிரீமியம் தர காராகும்.

எனவேதான் சொகுசு மற்றும் பிரீமியம் வசதியைத் தேடுவோர் மத்தியில் இக்கார் பிரபலமாக காணப்படுகின்றது. இதன்காரணாகவே தற்போது நல்ல விற்பனை வளர்ச்சியையும் அது பெற்றிருக்கின்றது. இக்கார் உயர்நிலை வேரியண்டான ஆஸ்தா (ஓ) இந்தியாவில் ரூ. 10.74 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இதன் ஆரம்பநிலை மாடலின் விலை 6.79 லட்ச ரூபாயாகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முந்தைய தலைமுறை ஐ20 காரைக் காட்டிலும் அதிக பிரீமியம் வசதிகளுடன் இக்கார் களமிறங்கியிருக்கின்றது. குறிப்பாக, ப்ளூலிங்க் எனும் சிறப்பு தொழில்நுட்ப வசதியை இது பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சிறப்பு தொழில்நுட்ப வசதியின்மூலம் பல்வேறு தகவல்களை செல்போன் வாயிலாக விரல் நுனியில் பெற முடியும். இதுமட்டுமின்றி, பன்முக எஞ்ஜின் தேர்வு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 10.25 இன்ச் அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், போஸ் சவுண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஒயர்லெஸ் சார்ஜர் என எக்கசக்க வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக ஏர் ப்யூரிஃபையர் வசதியையும் ஹூண்டாய் இக்காரில் வழங்கி வருகின்றது. ஹூண்டாய் ஐ20 மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, 83 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 120 எச்பியை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 100 எச்பி திறனை வெளியேற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகும்.