எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

டீசல் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதன் காரணத்தினால் சில நூறு கார்களை மஹிந்திரா திரும்பி அழைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் அதன் டீசல் எஞ்ஜின் கார்களில் கோளாறு ஏற்பட்டிருப்பதன் காரணத்தினால் அவற்றை திரும்பி அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாஷிக் பிளானட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட்ட டீசல் எஞ்ஜின் கார்களிலேயே கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

இதைத்தொடர்ந்தே குறிப்பிட்ட கால இடைவெளியில் உற்பத்தி செய்யப்பட்ட, கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கும் கார் மாடல்களை நிறுவனம் திரும்பி அழைத்திருக்கின்றது. நடப்பாண்டு ஜூன் 21 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட டீசல் எஞ்ஜின் கார்களிலேயே கோளாறு இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

இதுகுறித்த உரிய கார்களின் உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு திரும்பி அழைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அழைப்பின் அடிப்படையில் கோளாறுகள் நிவர்த்தி செய்யும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியை நிறுவனம் இலவசமாகச் செய்வதாக கூறப்படுகின்றது.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

உற்பத்தியில் ஏற்பட்ட கோளாறு என்கிற காரணத்தினால் இதனை கட்டமின்றி நிறுவனம் செய்கிறது. டீசல் எஞ்ஜினில் ஏற்பட்டிருக்கும் கோளாறானது விரைவில் அதிக மாசை ஏற்படுத்தும் வகையில் பாதிப்பை பெற்றிருக்கின்றது. இதனை முன்கூட்டியே சரி செய்யும் வகையில் நிறுவனம் திரும்பி அழைத்தல் பணியை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 600 யூனிட் கார்களை நிறுவனம் அழைக்க இருக்கின்றது.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

எந்த மாடல்களில் இந்த கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. நாட்டின் ஐந்தாம் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான இது தார் எஸ்யூவி, ஸ்கார்பியோ, மராஸோ, எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட கார்களை விற்பனைச் செய்து வருகின்றது.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

மிக சமீபத்தில் நிறுவனம் பொலிரோ நியோ எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நடைமுறைக்கு ஏற்ற முரட்டுத்தனமான தோற்றத்தில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த காரின் அடிப்படை தோற்றத்தில் விரைவில் 9 இருக்கைகள் கொண்ட நியோ ப்ளஸ் எனும் தேர்வும் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ கார் ரூ. 8.48 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. டியுவி 300 காரை ரீபிளேஸ் செய்யும் விதமாக இந்த காரை மஹிந்திரா இந்திய கார் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இக்கார்குறித்த கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எஞ்ஜினில் கோளாறு! டீசல் கார்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா! எத்தனை கார்களை திரும்பி அழைக்கிறது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் பொலியோ நியோ மாடலைத் தொடர்ந்து எக்ஸ்யூவி 700 கார் மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இந்த காரில் எக்கசக்க சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra Recalls 600 Diesel Engine Cars To Fix Engine Issues. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X