Just In
- 1 hr ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 3 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 5 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 5 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம பவர்ஃபுல்லான எஞ்சின், அசத்தும் வசதிகள்... கலக்க வருகிறது புதிய எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் எஸ்யூவி!
இந்தியர்களின் நாடித் துடிப்பை சரியாக கணித்து தனது ஒவ்வொரு தயாரிப்பையும் களமிறக்கி வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். அந்நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த அனைத்து மாடல்களுக்குமே பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக, தொடர்ந்து எஸ்யூவி ரக மாடல்களை தினுசு வாரியாக களமிறக்கி வருகிறது. அந்த வகையில், அடுத்தும் ஒரு அசத்தலான எஸ்யூவி மாடலை களமிறக்க உள்ளது எம்ஜி மோட்டார். அதாவது, கடந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் மாடல் விரைவில் இந்திய சந்தைக்கு வர இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவி மாடல் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்ததே. இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் பல முக்கிய வசதிகள் குறித்த விபரங்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக கசிந்துள்ளன.

அதன்படி, இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

அதேபோன்று, இந்த எஸ்யூவியில் மிகவும் சக்திவாய்ந்த 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட உள்ளது என்பது புதிய செய்தியாக இருக்கிறது. அதுவும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த எஞ்சினுடன் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளதாம். அதாவது, இரண்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் மூன்றுவிதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம்போல இந்த எஸ்யூவியிலும் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்க எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. குறிப்பாக, ADAS என்ற அதிநவீன தொழில்நுட்ப வசதி இந்த எஸ்யூவியில் வழங்கப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை செய்தியின் கடைசியில் உள்ள செய்தி இணைப்பை க்ளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த எஸ்யூவியில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற இருக்கின்றன. அந்த தகவல்கள் மூலமாக இந்த எஸ்யூவி மீதான மதிப்பு உங்களது எண்ண ஓட்டத்தில் உயர்வதற்கு வாய்ப்பு உண்டு.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த புதிய இசட்எஸ் எஸ்யூவியானது இந்தியாவில் அஸ்டர் என்ற பெயரில் வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டு காலத்தில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ADAS தொழில்நுட்பத்தின் இயக்கமும், சிறப்புகளும் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.