ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

செடான் கார் பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள், எஞ்சின் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

வேரியண்ட் மற்றும் விலை விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ஸ்டைல் மற்றும் எல் அண்கே (லாரின் அண்ட் க்ளெமென்ட்) என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஸ்டைல் வேரியண்ட்டிற்கு ரூ.25.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எல் அண்ட் கே வேரியண்ட்டிற்கு ரூ.28.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் முற்றிலும் புதிய மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட பரிமாணத்தில் பெரிய மாடலாகவும் மாறி இருக்கிறது. இதன் காரணமாக, கேபின் அதிக இடவசதி கொண்டதாக மேம்பட்டுள்ளது.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புற அம்சங்கள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் க்றிஸ்ட்டல் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குககள், பெரிய க்ரில் அமைப்பு, 17 அங்குல அலாய் வீல்கள், புதிய எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் வியூ கேமரா, ஸ்கோடா பிராண்டு பெயர் ஆகியவை முத்தாய்ப்பான விஷயங்களாக உள்ளன.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் உட்புறமும் மிக பிரிமீயமாகவும், விசாலமான உணர்வையும் தரும் வகையில் மாறி இருக்கிறது. டியூவல் டோன் வண்ண இன்டீரியர் தீம் வசீகரிக்கிறது. 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

வசதிகள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்ட் வசதி, ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு பொத்தான்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பீஜ் வண்ண செயற்கை லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் வந்துள்ளது.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

இதர அம்சங்கள்

மேலும், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிமோட் முறையில் இருக்கைகளை மடக்கும் வசதி, சார்ஜர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த காரில் 600 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைகளை மடக்கினால் 1,555 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்றும் வசதி உள்ளது.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் வசதி உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் ஸ்டைல் வேரியண்ட் கேண்டி ஒயிட், லாவா புளூ மற்றும் மேஜிக் புளூ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். எல் அண்ட் கே என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் பிரில்லியண்ட் சில்வர், மேப்பிள் பிரவுன், கேண்டி ஒயிட், லாவா புளூ மற்றும் மேஜிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சின் விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.25.99 லட்சத்தில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு அறிமுகம்!

சிறந்த தேர்வு?

டிசைன், வசதிகள், பாதுகாப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின் என அனைத்து விதங்களிலும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் சிறப்பான தேர்வாக வந்துள்ளது. டாப் வேரியண்ட்டில் கூட சன்ரூஃப் இல்லாதது மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched new gen Octavia car in India and starting at Rs.25.99 Lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X