நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

குஜராத்தை சேர்ந்த டொயோட்டா டீலர் ஒருவர் 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றி வருகிறார். சுற்றுவட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ள இவரது இந்த மாடிஃபை மாற்றம் தொடர்பான விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. வைரஸால் புதியதாக பாதிக்கப்படுவோரின் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், மற்றவர்களுக்கு பரவுவது இன்னமும் நிற்கவில்லை.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

இதனால் தற்போதும் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஆங்காங்கே சில பகுதிகளில் இருக்க தான் செய்கிறது. இதனை கருத்தில் கொண்டு பலர் தங்களது சொந்த கார்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளதை இதற்கு முன் பார்த்துள்ளோம்.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

இந்த நிலையில் குஜராத்தில் செயல்பட்டுவரும் ‘இன்ஃபினியம் டொயோட்டா' என்கிற அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம் மையம் ஒன்று, 200 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார்களை ஆம்புலன்ஸ்களாக மாடிஃபை செய்து வருகிறது.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

இதற்காக அந்த டீலர் காரின் கேபினில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஸ்ட்ரெச்சர் உள்பட ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை பொருத்தி வருகிறார். இந்த 200 இன்னோவா ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளுக்கும், கிராமப்புற பகுதிகளில் பயன்படுத்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

ஒரு இன்னோவா காரை ஆம்புலன்ஸாக மாற்றுவதற்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் வரையில் தேவைப்படுகிறதாம். ஒவ்வொரு இன்னோவா ஆம்புலன்ஸிற்கும் ஆகும் இந்த செலவிற்கு வாடிக்கையாளர் ஒருவர் பொறுப்பேற்கும்போது, அவருக்கு மானியம் வழங்கப்படும். அதாவது குஜராத்தில் டொயோட்டா இன்னோவா கார் ஒன்றின் ஆன்-ரோடு விலை ரூ.24.5 லட்சமாகும்.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

ஆனால் இந்த செலவை ஏற்கும் வாடிக்கையாளருக்கு, மானியத்தின்படி இன்னோவா காரின் விலை ரூ.20.6 லட்சமாக நிர்ணயிக்கப்படும். மீதி தொகையை வாடிக்கையாளர் விரும்பினால் எம்.எல்.ஏ/ எம்.பி அல்லது தனிநபர்/குடிமக்கள் நன்கொடையாக தானாக முன்வந்து வழங்கலாம் என்று இன்ஃபினியம் டொயோட்டா தெரிவித்துள்ளது.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

இதுகுறித்து பேசிய இன்ஃபினியம் டொயோட்டாவின் சேர்மன் அஜித் மெஹ்தா, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

மருத்துவமனைகளையும் நோயாளிகளையும் இணைக்கும் முக்கிய இணைப்பு ஆம்புலன்ஸ்கள் தான். ஆதலால் இந்த ஆம்புலன்ஸ் வேன்களை வழங்குவது மூலம், தொற்றுநோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் எங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்.

நம்பவே முடியல... 200 இன்னோவா கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் கார் டீலர்!! எந்த ஊரில் தெரியுமா?

இன்ஃபினியம் டொயோட்டா மாநில எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-களை அணுக துவங்கியுள்ளது. மேலும், சிலர் இவ்வாறான முறையில் இன்னோவா காரை வாங்க இந்த டீலர்ஷிப் மையத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles

English summary
Toyota dealer in Gujarat offers 200 innova ambulances to MLA & MPs and hospitals.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X