டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

குறிப்பிட்ட சில டொயோட்டா கார்களின் விலைகள் ரூ.1.18 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

புதிய நிதியாண்டின் துவக்கமான 2021 ஏப்ரல் மாதத்தில் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ள நிறுவனங்களில் டொயோட்டாவும் ஒன்றாகும். ஆனால் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஃபார்ச்சூனர் கார்களின் விலைகள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்களுடன் கிடைக்கிறது. இதில் டீசல் என்ஜின் ஜி, ஜி+, ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட்எக்ஸ் என அனைத்து விதமான வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இதில் டாப் இசட்எக்ஸ் வேரியண்ட்டை தவிர்த்து மற்ற வேரியண்ட்கள் அனைத்தும் 7 மற்றும் 8-இருக்கை தேர்வுகளில் கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

ஆனால் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும் இசட்எக்ஸ் 7-இருக்கை தேர்வில் மட்டும் தான் கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜின் ஆரம்ப நிலை ஜி வேரியண்ட்டில் மட்டும் கிடைப்பதில்லை.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

டீசல் என்ஜினை போல் இன்னோவா க்ரிஸ்டாவில் பெட்ரோல் என்ஜினையும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் தேர்வில் பெறலாம். இவை அனைத்தின் விலையும் ரூ.26,000 தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் டொயோட்டாவின் பிரபலமான இன்னோவா க்ரிஸ்டா காரின் ஆரம்ப விலை ரூ.16.26 லட்சத்தில் இருந்து ரூ.16.52 லட்சமாக உயர்ந்துள்ளது.

Toyota Innova Crysta Price
Petrol Old Price New Price Difference
GX MT 7-seater/ 8-seater ₹16.26 lakh/ ₹16.31 Lakh ₹16.52 Lakh/ ₹16.57 Lakh +₹26,000
GX AT 7-seater/ 8-seater ₹17.62 Lakh/ ₹17.67 Lakh ₹17.88 Lakh/ ₹17.93 Lakh +₹26,000
VX MT 7-seater ₹19.70 Lakh ₹19.96 Lakh +₹26,000
ZX AT 7-seater ₹22.48 Lakh ₹22.74 Lakh +₹26,000
Diesel Old Price New Price Difference
G MT 7-seater/ 8-seater ₹16.64 Lakh/ ₹16.69 Lakh ₹16.90 Lakh/ ₹16.95 Lakh +₹26,000
G+ MT 7-seater/ 8-seater ₹17.95 Lakh/ ₹18 Lakh ₹18.21 Lakh/ ₹18.26 Lakh +₹26,000
GX MT 7-seater/ 8-seater ₹18.07 Lakh/ ₹18.12 Lakh ₹18.33 Lakh/ ₹18.38 Lakh +₹26,000
GX AT 7-seater/ 8-seater ₹19.38 Lakh/ ₹19.43 Lakh ₹19.64 Lakh/ ₹19.69 Lakh +₹26,000
VX MT 7-seater/ 8-seater ₹21.59 Lakh/ ₹21.64 Lakh ₹21.85 Lakh/ ₹21.90 Lakh +₹26,000
ZX MT 7-seater ₹23.13 Lakh ₹23.39 Lakh +₹26,000
ZX AT 7-seater ₹24.33 Lakh ₹24.59 Lakh +₹26,000
டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

அதேபோல் இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் அதிகப்பட்ச விலை ரூ.24.33 லட்சத்தில் இருந்து ரூ.24.59 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தில் இருந்து அதன் மற்ற வேரியண்ட்கள் அனைத்தும் தற்போதுதான் முதல்முறையாக விலை உயர்வை காண்கின்றன.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

ஆனால் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் ஜி+ வேரியண்ட்டின் விலை மட்டும் இடையில் ஒருமுறை ரூ.3,000 அதிகரிக்கப்பட்டிருந்தது. விலை உயர்வை ஏற்றுள்ள மற்றொரு காரான ஃபார்ச்சூனர் 4X2, 4X4 என்ற இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

இந்த இரு வேரியண்ட்களையும் டீசல் என்ஜின் தேர்வுடனும் வாங்கலாம். இவை தவிர டீசல் என்ஜின், லெஜண்டர் 4X2 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் கிடைக்கிறது. ஆனால் பெட்ரோல் என்ஜின் தேர்வு 4x2 என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

இவை அனைத்தின் விலையும் தலா ரூ.36,000 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் லெஜண்டர் 4X2 ஆட்டோமேட்டிக் காரின் விலை மட்டும் அதிரடியாக ரூ.72,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பின் விளைவாக டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஆரம்ப விலை ரூ.29.98 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சத்தை கடந்து ரூ.30.34 லட்சமாக உயர்ந்துள்ளது.

Toyota Fortuner Price
Petrol Old Price New Price Difference
4x2 MT ₹29.98 Lakh ₹30.34 Lakh +₹36,000
4x2 AT ₹31.57 Lakh ₹31.93 Lakh +₹36,000
Diesel Old Price New Price Difference
4x2 MT ₹32.48 Lakh ₹32.84 Lakh +₹36,000
4x2 AT ₹34.84 Lakh ₹35.20 Lakh +₹36,000
4x4 MT ₹35.14 Lakh ₹35.50 Lakh +₹36,000
4x4 AT ₹37.43 Lakh ₹37.79 Lakh +₹36,000
Legender 4x2 AT ₹37.58 Lakh ₹38.30 Lakh +₹72,000
டொயோட்டா இன்னோவா கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! ஃபார்ச்சூனரின் விலையும் அதிகரிப்பு!

அதிகப்பட்ச விலை (4X4 ஆட்டோடிக் டீசல்) ரூ.37.43 லட்சத்தில் இருந்து ரூ.37.79 லட்சமாக உயர்ந்துள்ளது. லெஜண்டரின் விலை ரூ.37.58 லட்சத்தில் இருந்து ரூ.38.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் டொயோட்டா காம்ரி காரின் விலை ரூ.39.41 லட்சத்தில் இருந்து ரூ.1.18 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.40.59 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

Toyota Camry Price
Variant Old Price New Price Difference
Camry Hybrid ₹39.41 Lakh ₹40.59 Lakh +₹1.18 Lakh
Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Select Toyota Models Get Costlier By Up to Rs 1.18 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X