டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் டீசல் ஹைப்ரிட் எஞ்சின் தேர்வு?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் டீசல் ஹைப்ரிட் எஞ்சின் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாடா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் இந்திய வாடிக்கையாளர்களின் அதீத நம்பகத்தன்மையை பெற்ற மாடல்களாக உள்ளன. டிசைன், வசதிகள், எஞ்சின் என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை இந்த இரு மாடல்களும் சிறப்பாகவே பூர்த்தி செய்து வருகின்றன. இதனால், இந்த இரண்டு கார்களுக்கும் பெரிய அளவிலான வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகின்றன. குறிப்பாக, டொயோட்டா கார்களின் எஞ்சின் அதிக நம்பகத்தன்மையை பெற்றுள்ளன.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

இந்த நிலையில், தனது எஞ்சின் தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளது டொயோட்டா. இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டொயோட்டா நிறுவனம் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய டீசல் எஞ்சின்களை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

இதன்படி, இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் இந்த புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக ஆட்டோ இன்டஸ்ட்ரியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

தற்போது இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும், ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் கொடுக்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலுமே 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வழங்கப்படுகிறது.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

இந்த நிலையில், 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின்கள் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் செயல்படும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயணிகள் கார் பிரிவில் டீசல் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வருவதால் இந்த செய்தி மிகப்பெரிய ஆவலை உலக அளவில் டொயோட்டா வாடிக்கையாளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

மறுபுறத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகப்டசமாக 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

இந்த இரண்டு டீசல் எஞ்சின்களில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்போது மாசு உமிழ்வு குறையும் என்பதுடன், அதிக மைலேஜை வழங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். எனவே, இந்த புதிய டீசல் ஹைப்ரிட் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதை ஆட்டோமொபைல் உலகம் ஆவலோடு காத்திருக்கிறது.

 டீசல் ஹைப்ரிட் எஞ்சின்களுடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் அறிமுகமாக வாய்ப்பு?

இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் தவிர்த்து, ஹை ஏஸ் மற்றும் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்குகளிலும் இந்த டீசல் ஹைப்ரிட் எஞ்சின் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது. முதல் மாடலாக 2022 ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட டீசல் எஞ்சின் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Toyota is known to have one of the best hybrid technologies in the world. The brand's Indian line-up features two vehicles with hybrid engines already. However, according to the recent media report, the company could add more hybrid engines and this time to the diesel engines.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X