பாதுகாப்பு கொஞ்சமும் இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய பிரபல கார் மாடல்! டொயோட்டாவின் மானமே போச்சு!

டொயோட்டா நிறுவனத்தின் பிரபல கார் மாடல் ஒன்று மோதல் பரிசோதனையில் மண்ணைக் கவ்வியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொயோட்டாவின் தயாரிப்பு இதுமாதிரியான அடிமட்ட ரேட்டிங்கை பெறுவது இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலை விரிவாகக் கீழே காணலாம், வாங்க.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுசுகி பலினோ மற்றும் தாய்லாந்து மற்றும் பிரேசிலில் உற்பத்தி செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் ஆகிய இரு கார்களையும் லத்தின் என்சிஏபி அமைப்பு மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இந்த பரிசோதனையில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட இரு கார்களும் மிகவும் குறைவான தர மதிப்பெண்களை பெற்றிருக்கின்றன.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

மாருதி சுசுகி பலினோ பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு பூஜ்ஜியம் என்ற ரேட்டிங்கைப் பெற்று அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது (இதுகுறித்த விபரங்களை மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்). இதேபோன்று, டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் செடான் ரக காரும் மிக மிக குறைவான தர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

டொயோட்டா யாரிஸ் ஐந்திற்கு ஒரு ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருக்கின்றது. ஆகையால், ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட இரு கார்களும் பாதுகாப்பிற்கு துளியும் உகந்த வாகனங்கள் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. டொயோட்டா யாரிஸ் இரு ஏர் பேக் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (Electronic Stability Control) ஆகிய பாதுகாப்பு கருவிகளைப் பெற்றிருக்கின்றது.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

இருப்பினும், இந்த கார் பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் ஐந்திற்கு வெறும் 1 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றிருக்கின்றது. இந்த புகழ்பெற்ற 'பி' செக்மெண்ட் காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 41.43 சதவீத புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 63.85 சதவீத புள்ளிகளையும், பாதசாரிகளின் பாதுகாப்பில் 61.63 சதவீத புள்ளிகளையும் பெற்றது.

இவையனைத்தும் மிக மிக குறைவான புள்ளிகள் ஆகும். பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க போதுமான புள்ளிகள் இது இல்லை. எனவேதான் லத்தீன் என்சிஏபி டொயோட்டா யாரிஸ் காருக்கு ஒரு நட்சத்திர ரேட்டிங்கை வழங்கியிருக்கின்றது. தற்போது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யாரிஸ் செடான் லத்தீன் அமெரிக்காவிற்கான ஸ்பெக் மாடல் ஆகும்.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

அதேநேரத்தில், இந்த காரின் விற்பனையை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மிக சமீபத்தில் நிறுத்தியது. டொயோட்டா நிறுவனம் மாருதி சுசுகியின் சியாஸ் செடான் ரக காரை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டு யாரிஸ் செடான் இந்திய விற்பனையை நிறுத்தியது.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

நல்ல வேலையாக நிறுவனம் இந்த செயலை முன்னதாகவே செய்து விட்டதாக வாகன வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதேநேரத்தில், டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்பு இதுமாதிரியான அடிமட்ட பாதுகாப்பு ரேட்டிங்கை பெறுவது இதுவே முதல் முறை என யாரிஸ் காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்திய குழு தெரிவித்துள்ளது.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

பெரும்பாலும் டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்தபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கையாவது பெற்றுவிடும். ஆனால், யாரிஸ் அனைவரையும் ஏமாற்றிவிட்டது என லத்தின் என்சிஏபி அமைப்பின் தலைவர் ஸ்டீபன் பிராட்சியக் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

டொயோட்டா யாரிஸ் செடான் ரக காரை இந்தியாவில் இருந்து வெளியேற்றிருப்பதால் தற்போது நிறுவனத்தின்கீழ் கிளான்ஸா, அர்பன் க்ரூஸர், இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் வெல்ஃபையர் ஆகிய கார் மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. செப்டம்பர் 27 முதல் யாரிஸ் காரின் விற்பனைக்கு இந்தியாவில் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கொஞ்சம்கூட பாதுகாப்பு இல்ல... மோதல் ஆய்வில் மண்ணை கவ்விய டொயோட்டாவின் பிரபல கார் மாடல்! நிறுவனத்தின் மானமே போச்சு!

டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே மாருதியின் பலினோ கார் மாடலை க்ளான்ஸா எனும் பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்குக் வழங்கி வருகின்றது. இதுமட்டுமின்றி, மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா கார் மாடலை அர்பன் க்ரூஸர் எனும் பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்கின்றது. இவற்றின் வரிசையிலேயே மிக விரைவில் மாருதியின் சியாஸ் பெல்டா எனும் பெயரில் களமிறங்க இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota yaris score 1 star safety rating in latin ncap
Story first published: Friday, October 29, 2021, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X