விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

எம்யூவி எனப்படும் எம்பிவி (MPV) கார்கள், அவற்றின் அளவில் பெரிய தோற்றத்தினாலேயே குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்றவைகளாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும் விற்பனையில் உள்ள அனைத்தும் எம்பிவி கார்களும் நமது நாட்டு மக்களால் ஏற்று கொள்ளப்படவில்லை.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

மாருதி சுஸுகி எர்டிகா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா என சில எம்பிவி கார்கள் மட்டுமே பரவலாக விற்பனையாகுகின்றன. இவற்றுடன் புதியதாக இணைந்திருப்பது கியா கேரன்ஸ். இவை மூன்றும் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் எந்த அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

மாருதி சுஸுகி எர்டிகா

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமின்றி, கடந்த பல மாதங்களாகவே இந்தியாவின் நம்பர்.1 எம்பிவி காராக மாருதி சுஸுகி எர்டிகா விளங்கி வருகிறது. கடந்த மாதத்தில் மொத்தமாக 9,314 எர்டிகா கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2021 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எர்டிகா கார்களுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 49% அதிகமாகும்.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

ஏனெனில் அந்த மாதத்தில் 6,215 எர்டிகா கார்களையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் எர்டிகா மாடல் அப்டேட் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் விற்பனையில் மற்ற போட்டி மாடல்களுக்கு இந்த மாருதி சுஸுகி தயாரிப்பு ஆனது சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

எர்டிகாவின் பிரபலத்திற்கு அதன் குறைந்த விலையும், மடக்கும் வசதி கொண்ட அதன் 2ஆம் & 3ஆம் இருக்கை வரிசையுமே முக்கிய காரணம். ஆற்றல்மிக்க 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி ஏர்டிகா காரில் மேனுவல் & ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

எர்டிகா அளவிற்கு விலை குறைவானதாக இல்லாவிடினும், இந்தியர்கள் பலரது ஃபேவரட் எம்பிவி ரக கார்களுள் ஒன்றாக இன்னோவா விளங்குகிறது. இன்னோவாவின் புதிய தலைமுறை மாடலாக இன்னோவா க்ரிஸ்ட்டாவை டொயோட்டா அறிமுகம் செய்தே பல வருடங்கள் உருண்டோடிவிட்டன.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த பிரீமியம் தரத்திலான டொயோட்டா எம்பிவி கார் மொத்தம் 6,036 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதனை காட்டிலும் 5%, அதாவது ஏறக்குறைய 300 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2021 ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களின் எண்ணிக்கை 5,755 ஆகும்.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

2005இல் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா நீண்ட வருடங்களாக டொயோட்டாவிற்கு நம்பிக்கைக்குரிய மாடலாக விளங்குகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த காலங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான மிகவும் சில டொயோட்டா கார்களுள் இன்னோவாவும் ஒன்று ஆகும்.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

கியா கேரன்ஸ்

2019இல் செல்டோஸ் மூலம் இந்தியாவில் நுழைந்த தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் தனது 3வது மாடலாக கேரன்ஸ் எம்பிவி காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தைக்கு ஏற்ற குறைவான விலையில் கொண்டுவரப்பட்டதால், எதிர்பார்த்ததை போல் கேரன்ஸின் விற்பனை அடுத்த சில மாதங்களிலேயே சூடுப்பிடிக்க ஆரம்பித்தது.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

கடந்த ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரையில், மொத்தம் 5,558 கேரன்ஸ் கார்களை கடந்த மாதத்தில் கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அறிமுகத்தில் இருந்து சில மாதங்களிலேயே இந்தியாவின் டாப்-3 எம்பிவி கார்களுள் ஒன்றாக உருவெடுத்தாலும், முந்தைய ஜூலையை காட்டிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 420 கேரன்ஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

பிரீமியம், பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்ற கேரன்ஸில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் & 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

விற்பனையில் டொயோட்டா இன்னோவாவையே முந்திடும் போலயே!! கியா கேரன்ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?

கடந்த மாத விற்பனையில் 2வது இடத்தில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கும், கியா கேரன்ஸிற்கும் இடையே வெறும் 500 யூனிட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ஆகையால் வரும் மாதங்களில் விற்பனையில் இன்னோவாவை க்ரிஸ்ட்டா முந்தினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

Most Read Articles
English summary
Top 3 best selling mpvs in aug 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X