சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன!

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் முக்கிய கார் மாடல்களான இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) மற்றும் ஃபார்ச்சூனர் (Fortuner) ஆகிய கார் மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கின்றது. எவ்வளவு விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

டொயோட்டா நிறுவனம் (Toyota) அதன் பிரபல கார் மாடல்களான இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) மற்றும் ஃபார்ச்சூனர் (Fortuner) ஆகியவற்றின் விலையை மிக விரைவில் உயர்த்த இருப்பதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் வந்தன. இந்த நிலையில், இவ்விரு மாடல் கார்களின் விலையும் உயர்த்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

ரூ. 1.1 லட்சம் வரையில் புதிதாக விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விலையிலேயே இந்த அதிகபட்ச விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில், இன்னோவா க்ரிஸ்டாவின் விலையில் ரூ. 33 ஆயிரம் வரை விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜினானது ஜிஎக்ஸ் எம்டி, ஜிஎக்ஸ் ஏடி, விஎக்ஸ் எம்டி மற்றும் இசட்எக்ஸ் ஏடி ஆகிய வேரியண்டுகளில் மட்டுமே வழங்கப்படுகின்றது.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

இதேபோல், டீசல் எஞ்ஜினானது, ஜி எம்டி, ஜி-ப்ளஸ் எம்டி, ஜிஎக்ஸ் எம்டி, ஜிஎக்ஸ் ஏடி, விஎக்ஸ் எம்டி, இசட்எக்ஸ் எம்டி மற்றும் இசட்எக்ஸ்ஏடி ஆகிய வேரியண்டுகளில் வழங்கப்படுகின்றது. இந்த அனைத்து தேர்வுகளும் ஏழு இருக்கை வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

இவற்றின் விலையிலேயே புதியதாக உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. ரூ. 12 ஆயிரம் தொடங்கி ரூ. 33 ஆயிரம் விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக முன்னதாக ரூ. 17.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைத்து வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி கார் தற்போது ரூ. 17.30 லட்சம் எனும் ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

எந்தெந்த வேரியண்டின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக பட்டியலில் கீழே பார்க்கலாம்:

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா
பெட்ரோல் தேர்வு பழைய விலை புதிய விலை உயர்வு
GX MT 7-seater ₹17.18 Lakh ₹17.30 Lakh ₹12,000
GX MT 8-seater ₹17.23 Lakh ₹17.35 Lakh ₹12,000
GX AT 7-seater ₹18.54 Lakh ₹18.66 Lakh ₹12,000
GX AT 8-seater ₹18.59 Lakh ₹18.71 Lakh ₹12,000
VX MT 7-seater ₹20.26 Lakh ₹20.59 Lakh ₹33,000
ZX AT 7-seater ₹23.14 Lakh ₹23.47 Lakh ₹33,000
டீசல் பழைய விலை புதிய விலை உயர்வு
G MT 7-seater ₹17.94 Lakh ₹18.18 Lakh ₹24,000
G MT 8-seater ₹17.99 Lakh ₹18.23 Lakh ₹24,000
G+ MT 7-seater ₹18.87 Lakh ₹18.99 Lakh ₹12,000
G+ MT 8-seater ₹18.92 Lakh ₹19.04 Lakh ₹12,000
GX MT 7-seater ₹18.99 Lakh ₹19.11 Lakh ₹12,000
GX MT 8-seater ₹19.04 Lakh ₹19.16 Lakh ₹12,000
GX AT 7-seater ₹20.30 Lakh ₹20.42 Lakh ₹12,000
GX AT 8-seater ₹20.35 Lakh ₹20.47 Lakh ₹12,000
VX MT 7-seater ₹22.15 Lakh ₹22.48 Lakh ₹33,000
VX MT 8-seater ₹22.20 Lakh ₹22.53 Lakh ₹33,000
ZX MT 7-seater ₹23.79 Lakh ₹24.12 Lakh ₹33,000
ZX AT 7-seater ₹24.99 Lakh ₹25.32 Lakh ₹33,000
சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி ரக காரைப் போலவே ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காரிலும் டொயோட்டா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வித எஞ்ஜின் தேர்வுகளை விற்பனைக்கு வழங்குகின்றது.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 எம்டி, 4x2 ஏடி, 4x4 எம்டி, 4x4 ஏடி, லெஜண்டர் 4x2 ஏடி மற்றும் லெஜண்டர் 4x4 ஏடி ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 4x2 எம்டி மற்றும் 4x2 ஏடி ஆகிய தேர்வுகளில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் தேர்வு வழங்கப்படுகின்றது. மற்ற அனைத்தும் டீசல் எஞ்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

இவற்றின் விலையிலேயே ரூ. 1.1 லட்சம் வரை விலை உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வை வழங்கக் கூடிய 4x2 எம்டி மற்றும் 4x2 ஏடி ஆகிய இரு தேர்வுகளின் விலையில் மட்டும் ரூ. 66 ஆயிரம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து தேர்வுகளின் விலையிலும் ரூ. 1.1 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

இந்த அதிரடி விலை உயர்வினால் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலையும் உயர்ந்திருக்கின்றது. முன்னதாக ரூ. 30.73 லட்சமாக காணப்பட்ட இதன் ஆரம்ப விலை தற்போது ரூ. 31.39 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இக்கார் ரூ. 43.43 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

சொன்ன மாதிரியே ஏத்திட்டாங்க! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் கார்களின் விலை உயர்ந்தன...

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் எந்தெந்த வேரியண்டின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை பட்டியலாகக் கீழே பார்க்கலாம்:

டொயோட்டா ஃபார்ச்சூனர்
பெட்ரோல் பழைய விலை புதிய விலை உயர்வு
4x2 MT ₹30.73 Lakh ₹31.39 Lakh ₹66,000
4x2 AT ₹32.32 Lakh ₹32.98 Lakh ₹66,000
டீசல் பழைய விலை புதிய விலை உயர்வு
4x2 MT ₹33.23 Lakh ₹33.89 Lakh ₹66,000
4x2 AT ₹35.51 Lakh ₹36.17 Lakh ₹66,000
4x4 MT ₹35.89 Lakh ₹36.99 Lakh ₹1.10 Lakh
4x4 AT ₹38.18 Lakh ₹39.28 Lakh ₹1.10 Lakh
Legender 4x2 AT ₹38.61 Lakh ₹39.71 Lakh ₹1.10 Lakh
Legender 4x4 AT ₹42.33 Lakh ₹43.43 Lakh ₹1.10 Lakh
Most Read Articles

English summary
Toyota increased innova crysta and fortuner price in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X