புதிய டொயோட்டா இன்னோவா இவ்ளோ மைலேஜ் தருமா?.. இதுக்கே இந்த காரை வாங்க இந்தியர்கள் போட்டி போடுவாங்க!

புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ஹைபிரிட் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் தரும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இருக்கின்றது. இந்த காரை வெகு விரைவில் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. உலகளாவிய வெளியீடாக இந்த கார் இந்தோனேசியாவில் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. கடந்த 21 ஆம் தேதி அன்றே இந்த நிகழ்வு அந்நாட்டில் அரங்கேறியது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து விற்பனைக்கான அறிமுகத்தையும் அன்றைய தினமே டொயோட்டா நிறுவனம் அங்கு செய்தது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா காரைக் காட்டிலும் 3 லட்ச ரூபா அதிகம் விலையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தோனேசியா ருபையா 419.6 லட்சம் எனும் விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 21.8 லட்சம் ஆகும். இதேபோல் இந்தியாவிலும் சற்று அதிக விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தையில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அன்றே புதிய இன்னோவா ஹைகிராஸ் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டைப் பெற இருக்கின்றது. இதன் விலை ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இதன் விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய இன்னோவா ஹைகிராஸ் தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவாவைக் காட்டிலும் பல மடங்கு மாறுபட்ட ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனமும் அதன் சார்பில் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் டீசர் படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு படமும் அந்த காரில் இடம் பெற இருக்கும் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிய இன்னோவா ஹைகிராஸின் மைலேஜ் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. ஒரு லிட்டருக்கு 21 கிமீ வரை பயணிக்கும் திறனுடன் புதிய இன்னோவா ஹைகிராஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஹைபிரிட் அம்சம் கொண்ட இன்னோவா ஹைகிராஸின் மைலேஜ் திறன் ஆகும். அதேவேலையில், இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 15 கிமீ வரை மைலேஜ் தருமாம். இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. குறிப்பாக, புதிய இன்னோவாவிற்காக காத்திருப்போரை இந்த தகவல் குஷியில் ஆழ்த்தியிருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் வழக்கமான இன்னோவாவைக் காட்டிலும் இந்த இன்னோவா ஹைகிராஸ் காரை சற்று முரட்டு தனமான தோற்றத்தில் உருவாக்கியிருக்கின்றது.

இதற்காக புதிய க்ரில், குரோம் அக்செண்டுகள், பிளாக் இன்செர்டுகள், புதிய பம்பர், அகலமான ஏர் இன்லெட், ஃபாக்ஸ், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டே டைம் லைட், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, பனோரமிக் சன்ரூஃப், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற நவீன கால வசதிகளும் புதிய இன்னோவா ஹைகிராஸில் இடம் பெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய க்ரில், குரோம் அக்செண்டுகள், பிளாக் இன்செர்டுகள், புதிய பம்பர் உள்ளிட்டவற்றால் இந்த கார் எம்பிவி தோற்றத்தை இழந்து எஸ்யூவி தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. இந்த காரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கும் இவையே காரணமாக இருக்கின்றன. இதன் அளவும் வழக்கமான இன்னோவாவைக் காட்டிலும் சற்று அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் இன்னோவா ஹைகிராஸின் எஸ்யூவி தோற்றத்திற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

முன்னதாக பார்த்த அம்சங்கள் மட்டும் இன்றி இன்னும் பற்பல பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றாக அடாஸ் அம்சம் இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் அம்சம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவற்றுடனேயே ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமும் இந்த இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே புதிய இன்னோவாவின் உச்சபட்ச மைலேஜிற்கு காரணமாக இருக்கின்றது. இதுமாதிரியான பன்முக அம்சங்களே புதிய இன்னோவா ஹைகிராஸ் அதிக விலையில் விற்பனைக்கு வர காரணமாக இருக்கின்றது. இருப்பினும் நாம் செலுத்தும் தொகைக்கு ஒர்த்தான தயாரிப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Toyota innova hycross mileage details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X