இதுக்காகதான் ரொம்ப நாளா காத்துக்கிடக்குறாங்க... நிறுவனம் அறிவிப்பதற்கு முன்னரே புக்கிங்கை தொடங்கியாச்சு...

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு புக்கிங் தொடங்கியுள்ளது. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே டீலர்கள் சிலர் புக்கிங்கை ஏற்க தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கே தற்போது டொயோட்டா கார் விற்பனையாளர்கள் புக்கிங்கை தொடங்கியிருக்கின்றனர். இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

இன்னோவா ஹைகிராஸ்

வரும் நவம்பர் 25 ஆம் தேதி அன்றே இக்காரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை முன்னிட்டே நாட்டில் உள்ள ஒரு சில டொயோட்டா டீலர்கள் இன்னோவா ஹைகிராஸ் காருக்கான புக்கிங்குகளை ஏற்க தொடங்கியிருக்கின்றனர். இந்தியர்களின் பிரியமான எம்பிவி ரக கார் மாடல்களில் இன்னோவாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டு நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரில் வேறு எந்த டொயோட்டா கார்களிலும் இடம் பெறாத அம்சங்கள் சிலவற்றை நிறுவனம் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக முக்கியமாக டிரைவர் அசிஸ்டன்ஸ் மற்றும் ஆக்டீவ் சேஃப்டி (Ariver Assistance And Active Safety) எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப வசதி புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக தானியங்கி பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட பன்முக வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதவிர, காற்றோட்டத்தை அதிகம் வழங்கும் வசதிக் கொண்ட இருக்கை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்ட அம்சங்களும் இன்னோவா ஹைகிராஸில் இடம் பெற இருக்கின்றன. மேலே பார்த்த அம்சங்களுடன் சேர்த்து ஹைபிரிட் தொழில்நுட்பமும் இன்னோவா ஹைகிராஸில் இடம் பெற இருக்கின்றது.

2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கின்றது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் என்ன மாதிரியான பவரையும், ரேஞ்ஜையும் வழங்கும் என்பது பற்றிய தகவல் தெரிய வரவில்லை. இருப்பினும், ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமாக நல்ல ரேஞ்ஜை வழங்கும் பேட்டரி பேக் மற்றும் சிறப்பான இழுவை திறனை வழங்கக் கூடிய மின்சார மோட்டார் இக்காரில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தகைய சூப்பரான காராகவே இன்னோவா ஹைகிராஸ் வெகு விரைவில் இந்தியாவை வந்தடைய இருக்கின்றது. இதற்கே தற்போது புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கியுள்ளன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல், நிறுவனம் சார்பில் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களின் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் மற்றும் புக்கிங் விபரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இப்போது வரை டொயோட்டா நிறுவனம் இந்த புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் விலையை அறிவிக்கவில்லை. அறிமுக நாளன்றே விலை விபரம் மற்றும் கார் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நாள் எதிர்நோக்கி இந்திய எம்பிவி கார் பிரியர்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். குறிப்பாக இன்னோவா ஹைகிராஸில் இடம் பெற இருக்கும் அம்சங்களே அவரை காத்திருக்க தூண்டியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Toyota innova hycross unofficial booking
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X