எதிர்பார்ப்பு உச்சம்! நாளை அறிமுகமாகிறது அதிகம் மைலேஜ் தரும் இன்னோவா ஹைகிராஸ்.. ஷோரூம்ல கூட்டம் பிச்சுக்கபோது!

டொயோட்டா நிறுவனம் அதன் அதிகம் மைலேஜ் தரும் இன்னோவா ஹைகிராஸ் காரை நாளைய தினம் இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒட்டுமொத்த இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இருக்கின்றது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் முற்றிலும் தனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. தெளிவாகக் கூற வேண்டுமானால் இதுவரை தனது எந்தவொரு தயாரிப்புகளிலும் வழங்க சில புத்தம் புதிய சிறப்பம்சங்களுடன் இன்னோவா ஹைகிராஸை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

இந்தியா வரவிருக்கும் இந்த காரையே நிறுவனம் கடந்த 21 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இன்னோவா ஜெனிக்ஸ் எனும் பெயரில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரே இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் பெயரில் நாளை அறிமுகத்தைக் காண இருக்கின்றது. நாளைய தினம் இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் இதன் விலையும் நாளை அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேநேரத்தில் சில தகவல்கள் இந்த புதிய காரின் விலையை டொயோட்டா நிறுவனம் வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவின்போது அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுமட்டுமின்றி எப்போது புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்படும் என்கிற தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த வாகனத்தின் டெலிவரி பணிகள் அதிகாரப்பூர்வ வருகை அரங்கேறிய சில தினங்களிலேயே தொடங்கப்படும் என தெரிவிக்கின்றன.

டொயோட்டா நிறுவனம் இந்த காரை தன்னுடைய பிற தயாரிப்புகளிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும் விதமாக பன்முக சிறப்பு வசதிகளை வாரி வழங்கி உள்ளது. மிக முக்கியமாக அடாஸ் எனும் அதி நவீன தொழில்நுட்பத்தை புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் டொயோட்டா வழங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அம்சத்தை தனது வேறு எந்த தயாரிப்பிலும் அந்நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த அம்சத்தின் வாயிலாக பன்முக தானியங்கி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக டிரைவரின் உதவியின்றி தானாக காரை வழி நடத்துதல் மற்றும் அவசர காலத்தின் தானாக பிரேக் பிடித்தல் போன்ற சிறப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் அம்சம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இது மாதிரியான அம்சங்களுடனேயே புதிய இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த அம்சங்களே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கின்றது. குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களை இந்த கார் மிக அதிகளவில் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் வழக்கமான இன்னோவாவைக் காட்டிலும் சற்று பெரிய உருவத்தில் இந்த புதிய வெர்ஷனை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், மிக தாராளமான இட வசதியை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த உருவம் விரிவாக்கத்தினால் தற்போது இந்த எம்பிவி கார் எஸ்யூவி தோற்றத்திற்கு உயர்ந்திருக்கின்றது. இருப்பினும் இது ஓர் எம்பிவி ரக கார் என்பதை மறவ வேண்டாம். மேலும், இந்த புதிய வெர்ஷனை சற்று முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட காராக டொயோட்டா வடிவமைத்திருக்கின்றது. இதற்காக கவர்ச்சியான அம்சங்கள் சிலவற்றை நிறுவனம் வெளிப்புறத்தில் பயன்படுத்தியிருக்கின்றது.

புதிய க்ரில், குரோம் அக்செண்டுகள், பிளாக் இன்செர்டுகள், புதிய பம்பர், அகலமான ஏர் இன்லெட், ஃபாக்ஸ், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டே டைம் லைட், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட், பெரிய அலாய் வீல்கள், அடர்த்தியான பாடி கிளாடிங்குகள் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவையே காரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் புதிய இன்னோவா ஹைகிராஸ் டொயோட்டா வழங்கியிருக்கின்றது. இதுவே புதிய இன்னோவாவின் உச்சபட்ச மைலேஜிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் ஒரு லிட்டருக்கு 21க்கும் அதிகமான கிமீ வரை பயணிக்கும். வழக்கமான பெட்ரோல் தேர்வு லிட்டருக்கு 15 கிமீ வரை மைலேஜ் தருமாம். இதுமாதிரியான பன்முக அம்சங்களைக் கொண்டதாக புதிய இன்னோவா ஹைகிராஸ் உருவாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் அது சற்று அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Toyota innova hycross unveiling tomorrow
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X