சிங்கம் களமிறங்க போகுதே... மீண்டும் இன்னோவா டீசலுக்கு புக்கிங் தொடக்கமா! பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

டொயோட்டா நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்னோ ஹைகிராஸ் காரை இந்திய சந்தையில் இன்று வெளியீடு செய்தது. இந்த காரின் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னோ கிரிஸ்டா டீசல் காருக்கான புக்கிங் பணிகளை நிறுவனம் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் இன்னோவா கிரிஸ்டாவும் ஒன்று. இந்த கார் மாடலை பெட்ரோல், டீசல் என இரு விதமான தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வந்தது. இந்த நிலையிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதன் டீசல் எஞ்ஜின் தேர்வின் விற்பனையை மட்டும் நிறுவனம் நிறுத்தியது. தெளிவாகக் கூற வேண்டுமானால் டீசல் எஞ்ஜின் இன்னோவா கிரிஸ்டாவிற்கான முன் பதிவுகளை அதிரடியாக நிறுத்தியது.

இன்னோவா

நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த டீசல் கார் பிரியர்களையும் கவலையடையச் செய்யும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் டீசல் ஆப்ஷனிற்கு மீண்டும் புக்கிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் இனி டீசல் இன்னோவா கிரிஸ்டாவை வாங்கிக் கொள்ள முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. நிறுவனம் இன்றைய (நவம்பர் 25) தினம் இந்திய சந்தையில் புதுமுக இன்னோவா ஹைகிராஸ் காரை பொது பார்வைக்குக் கொண்டு வந்தது.

இந்த வெளியீட்டு நிகழ்வின் போதே நிறுவனம் மீண்டும் இந்தியாவில் இன்னோவா கிரிஸ்டா டீசலுக்கு புக்கிங் தொடங்கப்படு இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. வெகுவிரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது இதனை நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் எம்டி ஆன விக்ரம் கிர்லோஸ்கர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். முன்னதாக அதிக வெயிட்டிங் பீரியட் டீசல் இன்னோவா கிரிஸ்டாவிற்கு அதிகளவில் நிலவி வந்த காரணத்தினாலேயே அக்காருக்கான புக்கிங் நிறுத்தப்பட்டது. இந்த தற்காலிக புக்கிங் நிறுத்தம் தற்போது விளக்கப்பட்டு மீண்டும் முன் பதிவு பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

டீசல் ஆப்ஷன் இன்னோவா கிரிஸ்டாவில் 2.4 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 150 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது. பெட்ரோல் தேர்வில் 2.7 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 166 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. டீசல் மோட்டார் தேர்வில் வழங்கப்படும் அதே கியர்பாக்ஸ் தேர்வே இந்த பெட்ரோல் மோட்டாரிலும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார் மாடல்களில் இன்னோவா கிரிஸ்டாவும் ஒன்று. அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக இது இருக்கின்றது. எனவேதான் இப்போதும் இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் காராக இன்னோவா இருக்கின்றது.

இந்த காரணத்தினாலேயே டொயோட்டா நிறுவனம் மிக சிறந்த வெர்ஷனாக உருவாக்கப்பட்டிருக்கும் இன்னோவா ஹைகிராஸை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகளும் இந்தியாவில் தற்போது தொடங்கியிருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்படுகின்றது. இந்த காரை பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

இதன் பெட்ரோல் வெர்ஷன் ஜி மற்றும் ஜிஎக்ஸ் என இரு ஆப்ஷன்களிலும், ஹைபிரிட் வெர்ஷன் விஎக்ஸ், இசட்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் (ஓ) என மூன்று விதமான தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் பெட்ரோல் வெர்ஷனில் 2.0 லிட்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 174 பிஎஸ் பவரை வெளியேற்றும். இதன் ஹைபிரிட் பெட்ரோல் வெர்ஷனில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டும் இணைந்து 186 பிஎஸ் பவரை வெளியேற்றும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் சிவிடி மற்றும் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட உள்ளன. மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இதில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னோவா ஹைகிராஸின் ஹைபிரிட் தேர்வு ஒரு லிட்டருக்கு 21.1 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல் தேர்வு 15 கிமீ மைலேஜையும் வழங்கும். 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என இரு விதமான ஆப்ஷன்களிலும் புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Toyota opens innova crysta diesel booking soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X