40கிமீ மைலேஜ் மாருதி கார், மதுரைக்கு புதிய வந்தே பாரத், காரில் வந்த தேவதைகள், நீங்க தவறவிட்ட டாப் 10 நியூஸ்!

மாருதி ஸ்விஃப்ட் நான்காம் தலைமுறை (Maruti Swift 4th Gen) கார் டெஸ்டிங் துவங்கியது, தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு தொழிலதிபர் ஒருவர் டாடா பஞ்ச் (Tata Punch) காரை பரிசாக வழங்கியது, மஹிந்திரா காருக்குள் ஒளிந்திருந்த பாம்பை கண்டுபிடித்த நாய், காஸ்ட்லியான காரில் வந்திறங்கிய தேவதைகள், மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் (Vande Bharat Train), உள்ளிட்ட இந்த வாரம் வெளியான 10முக்கியமான செய்திகளை நீங்கள் மிஸ் செய்திருக்கலாம்,

சென்னை-சேலம் விமான சேவை: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையேயான விமான சேவை தற்போது துவங்கியுள்ளது. கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட சேவை பின்னர் பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லை என்ற காரணத்திற்காக துவங்கப்படாமல் இருந்தது. தற்போது இந்த சேவை இண்டிகோ (Indigo) விமான நிறுவனத்தால் துவங்கப்பட்டுள்ளது.

top 10 news weekly update

முதல் நாள் பயணத்திலேயே கோவா மாநில கவர்னர் மற்றும் நடிகை நமிதா (Actress Namitha) உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். முதன்முறையாக சென்னையிலிருந்து சேலம் வந்த இந்த விமானத்திற்கு சேலம் மாவட்ட கலெக்டர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். இந்த செய்தி குறித்த முழுமையான விபரங்களை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

தமிழகத்திற்கு 700 எலெக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கீடு: மத்திய அரசின் பிஎம் இபஸ் சேவா (PM EBus Seva) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 700 பஸ்களை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பஸ்களுக்கான குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு வழங்கும் மீதி தொகையை மாநில அரசு வழங்கி இந்த பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

top 10 news weekly update

இதன்படி கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சென்னை சுற்றியுள்ள அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளில் இந்த பஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளுக்கு எத்தனை எத்தனை பஸ்கள் என்ற விரிவான விபரத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

டாடா நிறுவனத்திற்கு ரூ 766 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு: கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் மேற்குவங்க மாநிலத்தில் டாடா நானோ (Tata Nano) கார்களை தயாரிக்க புதிய ஆலை கட்ட திட்டமிட்டு முதலீடு செய்திருந்தது. ஆனால் அங்கு உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஆலை குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இது குறித்த வழக்கு நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது.

top 10 news weekly update

இந்த வழக்கில் மேற்கு வங்க அரசு டாடா நிறுவனத்திற்கு ரூபாய் 766 கோடியை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த ஆலையை அமைப்பதில் என்ன பிரச்சனை ஏற்பட்டது? இது ஏன் குஜராத் மாநிலத்திற்கு சென்றது? எதற்காக இந்த நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது? என்ற முழுமையான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இந்தியாவில் வரிசையாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மதுரை-பெங்களூரு இடையே புதிதாக ஒரு வந்தே பாரத் ரயிலை (Vande Bharat Train) அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.தென்னக ரயில்வேக்கு அடுத்து ஒதுக்கப்படும் வந்தே பாரத் ரயில் இந்த ரூட்டில் தான் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

top 10 news weekly update

ஏற்கனவே பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த வந்தே பாரத் ரயில் எந்தெந்த ஊர்களில் எல்லாம் நின்று செல்லும் இதில் உள்ள வசதிகள் என்னென்ன? என்பது குறித்த விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

மாருதி சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்திற்கு வரவேற்பு: மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்கள் காரை சொந்தமாக வாங்காமல் சப்ஸ்கிரைப் (Maruti Subscription plan) முறையில் வாங்க ஆப்ஷனை அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வரை 8000 வாடிக்கையாளர்கள் மாருதி காரை பணமே கட்டாமல் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் காரை பெரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

top 10 news weekly update

தற்போது இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையில் எந்த கார் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையால் வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம் ?எந்தெந்த நகரங்களில் எல்லாம் இந்த சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார்கள் வழங்கப்படுகிறது? என்ற தகவல்களை மாருதி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தகவல்களை நீங்கள் விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யலாம்.

டிவிஎஸ் எக்ஸ் ரிவ்யூ: டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் (Tvs X Review)என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் டிரைவ்ஸ்பார்க் குழுவை தனது ஆலைக்கு அழைதிருந்தது அங்கு டிரைவ்ஸ்பார்க் குழுவினர் இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிப் பார்த்தனர்.

top 10 news weekly update

இந்த ரிவ்யூ இந்த வாரத்தில் வெளியாகியிருந்தது. இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (TVS X Electric Scooter) நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட இதன் டிசைன் வித்தியாசமாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கிறது ? இதன் விலை என்ன? என்ற அனைத்து தகவல்களையும் நீங்க இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

காருக்குள் இருந்த பாம்பை கண்டுபிடித்த நாய்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 (Mahindra XUV 500) காரில் சுற்றுலா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று காரை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் காரை திறந்து சோதனை செய்தபோது உள்ளே எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

top 10 news weekly update

அதன்பின்பு அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் உள்ள நபர்களை அழைத்து வந்த பார்த்தபோதும் உள்ளே எதுவும் இருந்ததாக தெரியவில்லை .பின்னர் பாம்பு பிடிப்பதில் பிரபலமான வாவா சுரேஷ் (Vava Suresh) என்பவர் வந்து பார்த்தபோது காருக்குள் பாம்பு இருந்தது தெரிய வந்தது. இந்த பாம்பை கண்டுபிடிக்க நாய் தான் உதவியுள்ளது. என்ன நடந்தது என்ற விரிவான விபரத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

காஸ்ட்லி காரில் வந்திறங்கிய தேவதை: நடிகைகள் மௌனி ராய் (Mouni Roy) மற்றும் ஆலியாபட் (Alia Bhatt) ஆகியோர் ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் காஸ்ட்லியான காரில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு நடிகைகளும் தனித்தனியாக கார்களில் வந்து இறங்கினார்கள். தனியாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

top 10 news weekly update

இதில் நடிகை மௌனி ராய் இறங்கி வருவது ரேஞ்ச் ரோவர் வெளார் (Range Rover Velar)காராகும் நடிகை ஆலியா பட் இறங்கி வருவது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) காராகும். நடிகைகள் காரில் இருந்து இறங்கி வரும் வீடியோ மற்றும் அந்த கார் குறித்த விரிவான தகவல்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

ஊழியர்களுக்கு டாடா பஞ்ச் கார் பரிசு: அரியானா மாநிலம் பஞ்ச்குல்லா பகுதியில் மிட்ஸ்கார்ட் என்ற ஃபார்மா சூட்டிக்கல் (Mitskart Pharmaceuticals) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஊழியர்களுக்கு அதன் ஊழியர் எம்கே பாட்டீயா என்பவர் ஆளுக்கு ஒரு டாடா பஞ்ச் (Tata Punch) காரை வாங்கி தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.

top 10 news weekly update

இவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்த நபருக்கு கூட இந்த டாடா பஞ்ச் கார் பரிசு கிடைத்துள்ளது. தற்போது மார்க்கெட்டில் உள்ள பிரபல காராக உள்ள டாடா பஞ்ச் காரை பெறும் அளவிற்கு இந்த 12 ஊழியர்களும் அப்படி அந்த நிறுவனத்திற்கு என்ன செய்துள்ளனர்? எதற்காக இந்த 12 ஊழியர்களுக்கு மட்டும் இந்த பரிசை அந்நிறுவனத்தின் உரிமையாளர் வழங்கியுள்ளார்? என்ற விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

மாருதி ஸ்விஃப்ட் நான்காம் தலைமுறை கார் சோதனை: இந்தியாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான கார் மாருதி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் (Maruti Swift 4th Gen) தான். இந்நிறுவனம் நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் காரை தயாரித்து அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கடந்த வாரம் ஜப்பான் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் இந்த காருக்கான டெஸ்டிங் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் மத்தியில் இந்த கார் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதற்கு முக்கியமான காரணம் இதன் மைலேஜ் தான். பல காஸ்ட்லி பைக்குகளை விட இந்த காரின் மைலேஜ் அதிகம் என்று கூறப்படுகிறது. அப்படி இந்த கார் என்னதான் மைலேஜ் தருகிறது? இவ்வளவு அதிகமான மைலேஜ் தர அப்படி என்ன தொழில்நுட்பத்தை மாருதி நிறுவனம் இந்த காரில் பயன்படுத்தி உள்ளது? என்ற விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

நான்காம் தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சோதனை ஓட்டம் இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ள நிலையில், அனேகமாக வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 5, 2023, 15:52 [IST]
English summary
Maruti swift 4th gen madurai bangalore vande bharat top 10 news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X