29 கிமீ மைலேஜ் தரும் காரின் சாதனை, ஷில்பா ஷெட்டியின் ரூ8 கோடி கார் என இந்த வாரத்தின் டாப் 10 நியூஸ் இதான்!
மாருதி ஃபிரான்க்ஸ் (maruti Fronx) காரின் விற்பனை சாதனை, ரூ 8 கோடி மதிப்பிலான காரில் வந்திறங்கிய நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty), தீபாவளி நேரத்தில் புதிய கார்களுக்கான ஆஃபர்கள், ஷோரூம் உரிமையாளருக்கே தெரியாமல் 21 டுகாட்டி (Ducati) பைக்குகளை விற்ற ஊழியர், உள்ளிட்ட பல முக்கியமான சுவாரசியமான செய்திகள் கடந்த வாரம் நடந்தன. அதில் டாப் 10 செய்திகளை இங்கே காணலாம் வாருங்கள்
செர்ரி நியூ எனர்ஜி எலெக்ட்ரிக் கார்: சீனாவை சேர்ந்த செர்ரி நியூ எனர்ஜி (Chery New Energy) என்ற நிறுவனம் இந்திய மதிப்பில் ரூபாய் 8 லட்சம் என்ற விலையில் சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம் குறைவான விலையில் தரமான கார்களை தயாரிப்பதில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் நியூ லிட்டில் அண்ட் (New Little Ant) என்ற புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிகாரில் ஏராளமான சொகுசு வசதிகள் இருக்கிறது. சீனாவில் சிறிய ரக கார்கள் மீது மக்கள் அதிக மோகம் கொண்டுள்ளதால் அந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக இந்த கார் களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்கள் மற்றும் இதன் தொழில்நுட்ப அம்சங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
பென்ஸ் காரில் வந்திறங்கிய தேவதைகள்: சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் மற்றும் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஆகியோர் மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் காரில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காரின் விலையே சுமார் 2கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த கார் பெரும்பாலும் பிரபலங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள காராகும். அப்படி அவர்கள் ரூபாய் 2 கோடி கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கிறது? இந்த காரில் அந்த இரு நடிகைகளும் வந்து இறங்கிய பரபரப்பான வீடியோ, உள்ளிட்ட அனைத்தையும் காண இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
ஷோரூம்க்கே தெரியாமல் நடந்த நூதன திருட்டு: ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள குக்கட்பள்ளியைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவர் டுகாட்டி பைக் ஷோரூமில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திடீரென பணியில் இருந்து நின்றுவிட்ட நிலையில் தற்போது போலீசார் இவரை கைது செய்துள்ளனர். என்ன விவரம் என்று விசாரித்த போது தான் பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.

பணியில் இருந்த போது 21 டுகாட்டி பைக்குகளை ஷோரூமிற்க்கே தெரியாமல் விற்பனை செய்துள்ளார். இதை அவர் வெளியேறிய பின்னர் நடந்த ஆடிட்டிங்கில் தான் இதை கண்டுபிடித்துள்ளனர். இவர் எப்படி ஷோரூமிற்க்கே தெரியாமல் 21 பைக்குகளை விற்பனை செய்தார் என்ற விரிவான விபரத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
மாருதி கார்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை தள்ளுபடி: மாருதி நிறுவனம் தீபாவளி ஆஃபராக தனது கார்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை தள்ளுபடி அறிவித்தது. அதன்படி நெக்ஸா டீலர்ஷிப்புகளில் பலேனோ, இக்னீஷ், ஜிம்னி, சியாஸ் ஆகிய கார்களுக்கு தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக ஜிம்னி காருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை தள்ளுபடி அறிவித்திருந்தது.

தீபாவளி நேரத்தில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த தள்ளுபடி ஆஃப்ரை அறிவித்திருந்தது. இந்த ஆஃபரை தற்போதும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆஃபர் குறித்த விரிவான விபரங்களை பெற இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் டெலிவரி துவக்கம்: டாடா நிறுவனம் தனது ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது அந்த காரின் டெலிவரி துவங்கியுள்ளது. அந்த காரை வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவரி கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் தற்போது டாடா ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

டாடா ஹாரியர் கார் என்பது ஒரு சொகுசு வசதி நிறைந்த எஸ்யூவி காராக இருக்கிறது. இதை அந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் தான் மேம்படுத்தி ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த காரின் டெலிவரி துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த கார் குறித்த விரிவான விபரங்கள், விலை விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் படிக்க கிளிக் செய்யுங்கள்.
கியா கார்னிவல் காரின் அம்சங்கள்: கியா நிறுவனம் வரும் 2024-ம் ஆண்டு தனது கார்னிவல் காரை அப்டேட் செய்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அந்த காரின் பல புதிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த முக்கியமான செய்தி கடந்த வாரம் வெளியாகிறது. பலர் இந்த செய்திக்காக காத்திருந்தனர். நீண்ட காத்திருப்பிற்கிடையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி வரும் 2024-ம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ள கியா கார்னிவல் காரில் நாம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்ற டாப் 5 தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த காரில் உங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள் பக்கத்து வீட்டு குடும்பத்தையும் சேர்த்து கூட்டிச்செல்லும் வசதி நிறைந்த காராக இருக்கிறது. இந்த கார் குறித்த டாப் 5 தகவல்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
பைக்கில் காதலியுடன் ரொமான்ஸ்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் சாலையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை பைக்கின் முன்பக்கம் டேங்க் பகுதியில் அமர வைத்து கொண்டு அவருடம் முத்தமிட்டு கொண்டே பைக் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த இளைஞரை போலீசார் தேடி கண்டுபிடித்தனர்.

அவர் பைக்கில் காதலியுடன் சில்மிஷம் செய்து கொண்டே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில். தற்போது அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் இனி இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இளைஞர் தனது காதலியுடன் பைக்கில் நடுரோட்டில் சில்மிஷம் செய்து கொண்டே சென்ற வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மஹிந்திரா தார் மாருதி ஜிம்னி விற்பனை ஒப்பீடு: கடந்த அக்டோபர் மாத வாகன விற்பனை அறிக்கை எல்லாம் வெளியாகியிருந்த நிலையில் மாருதி நிறுவனம் தனது ஜிம்னி காரை லைப் ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யூவி காராக விற்பனை செய்கிறது. இதே செக்மெண்டில் ஏற்கனவே மஹிந்திரா தார் காரும் இருக்கிறது. இந்த இரு கார்களும் விற்பனையில் கடும் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜிம்னி காரின் வருகைக்குப் பிறகு மஹிந்திரா தார் கார் விற்பனை சரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரத்தை பார்க்கும்போது அதில் பெரும் மகிழ்ச்சி காத்திருந்தது. நாம் எல்லாம் நினைத்தது ஒன்றாக இருந்தது ஆனால் கடந்த அக்டோபர் மாத விற்பனை அறிக்கையில் நடந்தது ஒன்றாக இருக்கிறது. அப்படி அந்த விற்பனை அறிக்கையில் என்னதான் கூறப்பட்டுள்ளது என்ற விபரத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
8 கோடி ரூபாய் காரில் வந்திறங்கிய பிரபலம்: நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த ஏப்ரல் மாதம் பென்ட்லி பிளையிங் ஸ்போர் காரை சொந்தமாக வாங்கினார். இந்த காரை அவர் பயன்படுத்தப்பட்ட காராக வாங்கினார். இவர் ஏற்கனவே வைத்திருக்கும் கார்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பயன்படுத்திவிட்டு இவரிடம் விற்ற கார்களாகவே உள்ளன. இவர் அந்த காரில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

நடிகை ஷில்பா ஷெட்டி வந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 8 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அவ்வளவு செலவு செய்து இந்த காரை வாங்கும் அளவிற்கு இந்த காரில் என்ன இருக்கிறது? நடிகை ஷில்பா செட்டி சொந்தமாக என்னென்ன கார்களை எல்லாம் வைத்திருக்கிறார் ? அவரிடம் உள்ள காஸ்ட்லி கார்களின் பட்டியல் என்ன என்ற சுவாரசியமான தகவல்களை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மாருதி ஃபிரான்க்ஸ் கார் விற்பனை சாதனை: மாருதி நிறுவனம் கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தான் தனது ஃபிரான்க்ஸ் என்ற எஸ்யூவி காரை முதன்முதலாக காட்சிப்படுத்தியது. அதன் பின்னர் இந்த கார் விற்பனைக்கு வந்தது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கார் மாருதி பலேனோ காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராகும்.

இந்த கார் விற்பனைக்கு வந்து வெறும் 6 மாதங்கள் தான் ஆகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தான் இந்த கார் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் இந்த கார் தற்போது 75,000 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனை எப்படி நிகழ்ந்தது என்ற முழுமையான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
ஆட்டோமொபைல் உலகில் தினம் தோறும் பல புதிய புதிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற சுவாரசியமான செய்திகளை எல்லாம் டிரைவ்ஸ்பார்க் தளம் எப்பொழுதும் உங்களுக்காக வழங்கிக் கொண்டிருக்கிறது. எங்கள் தளத்தில் வரும் செய்திகளை தினம்தோறும் படித்து ஆட்டோமொபைல் உலகில் தினம் தோறும் என்னென்ன சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற முழு விவரங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









