100 கி.மீ மைலேஜ் தரும் பைக், சென்னை டூ பெங்களூரு விரைவு வந்தே பாரத் என இந்த வாரத்தின் டாப் 10 செய்திகள்!
ஆட்டோமொபைல் துறையில் தினமும் பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதன்படி கடந்த வாரம் வெளியான முக்கியமான செய்திகள் மற்றும் நீங்கள் தவறவிட கூடாத செய்திகள். ஆகியவற்றின் தொகுப்பை தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
ரெனால்ட் க்விட் விற்பனை: கடந்த பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் மொத்தம் 822 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த 1758 என்ற காரின் விற்பனையை விட தற்போது கிட்டத்தட்ட 1000 கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

சென்னை-பெங்களூர் இரண்டாவது வந்தே பாரத் ரயில்: சென்னை பெங்களூர் இடையே தற்போது இரண்டாவது வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் சென்னையிலிருந்து கிளம்பி 3 மணி நேரம் 48 நிமிடத்தில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தை சென்று அடைகிறது. இது பெங்களூர் வாழ் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
சென்னை புதிய புற வழிச்சாலை: சென்னையில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிதாக புறவழிச் சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை உத்தரமேரூரில் இந்த சாலை அமைகிறது இதன் மூலம் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விரைவாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

பஜாஜ் சிஎன்ஜி பைக்: பஜாஜ் நிறுவனம் விரைவில் தனது உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த பைக் வரும் ஜூலை மாதம் அறிமுகமாகும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
திருச்சி-பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: திருச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு புதிதாக வந்தே பாரத் ரயில் அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

முதியவர் வாங்கிய 8வது ரோல்ஸ்ராய்ஸ்: முதியவர் ஒருவர் தனது கடைசி காலத்தில் எட்டாவது முறையாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றே வாங்கிய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் ஏற்கனவே 7 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது 8வது புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுபோக இவரிடம் வேறு சில விளைவு உயர்ந்த கார்களும் இருக்கின்றன. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
இஸ்ரோவின் புதிய சாதனை: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த சோதனை கர்நாடக மாநிலத்தில் உள்ள சோதனை மையத்தில் நடந்துள்ளது. இந்த சோதனை எப்படி நடந்தது? இதில் இஸ்ரோ எப்படி வெற்றிகரமாக இதை சோதனை செய்தது? என்ற முழு விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்
டாடாவின் வாகன ஸ்கிராப்பிங் மையம்: டாடா நிறுவனம் டெல்லியில் புதிதாக வாகனங்களை ஸ்கிராப் செய்யும் மையத்தை தற்போது துவங்கி உள்ளது. இது அந்நிறுவனத்தின் ஐந்தாவது ஸ்கிராப்பிங் மையமாகும். இந்த ஸ்கிரப்பிங் மையத்தில் பழைய வாகனங்கள் அனைத்தும் ஸ்கிராப் செய்யப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
மாருதி கிராண்ட் விட்டாரா விற்பனை: மாருதி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 11,002 கிராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு 9803 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 20% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
பெட்ரோல் பங்குகளில் சிசிடிவி: டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஸ்மார்ட் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பெட்ரோல் போட வரும் வாகனங்களை கண்காணித்து அந்த வாகனங்களுக்கு புகைச்சான்று இல்லை என்றால் உடனடியாக அதை அலர்ட் செய்து, அவர்களுக்கு புகை சான்று வழங்கும் முறையை தற்போது டில்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.


Click it and Unblock the Notifications









