கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

Written By:

மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரில் சாலை ஓரத்தில் நின்றிருந்த கார் மீது அதிவேகத்தில் வந்த கவாஸாகி நின்ஜா 650 சூப்பர் பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்தவரும், காரில் இருந்த இரண்டு குழந்தைகளும் காயமடைந்தனர்.

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

புனே நகரில் என்ஐபிஎம் சாலையில் உள்ள நியூ கஃபே என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. மணிக்கு 150 கிமீ வேகத்தில் அந்த பைக் சீறிப்பாயந்து வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

அந்த வேகத்தில் அவரால் பைக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில், கார் மீது அந்த பைக் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கி உள்ளது. பைக் மிக மோசமாக சேதமடைந்தாலும், பைக்கை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறித்து உபயோகமான தகவல் கிடைத்துள்ளது.

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

பைக்கை ஓட்டி வந்தவர் முறையான பாதுகாப்பு கவசங்கள், தலைக்கவசம் மற்றும் உடுப்புகளை அணிந்து வந்துள்ளார். இதனால், அவர் காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார். இல்லையெனில், மிக மோசமான நிலையை அவர் எட்டி இருக்கக்கூடும்.

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

எனவே, இருசக்கர வாகனங்களை ஓட்டுவோருக்கு பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துவது மிக அவசியம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த மோசமான விபத்தில் அவரை காப்பாற்றி இருப்பது அவர் அணிந்து வந்த பாதுகாப்பு கவசங்கள் என்பது புலனாகி உள்ளது.

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

மேலும், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவோரை போலீசார் விருப்பம் இல்லாமல் வழக்குகளில் சேர்க்கக்கூடாது என்ற புதிய விதிமுறையை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால், இந்த விபத்தில் சிக்கிய குழந்தைகள் மற்றும் பைக் ஓட்டி வந்தவரை அருகில் நின்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததால், அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

ஏற்கனவே, விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற செல்வோருக்கு பல சட்ட ரீதியான தொல்லைகள் இருந்தன. தற்போது அதில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது இந்த விபத்தில் சிக்கிய மூன்று பேரின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. எனவே, விபத்தில் சிக்குவோருக்கு உதவுவதற்கு எந்த தடையும் இப்போது இல்லை என்பதையும் மனதில் வைக்கவும்.

கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!

ஏனெனில், விபத்தில் சிக்குபவர்களை 'கோல்டன் ஹவர்' என்று குறிப்பிடப்படும் அந்த உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பதால் அவர்களது உயிர் நிச்சயம் காப்பாற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனை மனதில் வைத்து விபத்தில் உதவுபவர்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள் என்ற கோரிக்கையையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் இந்த நேரத்தில் உங்கள் முன் வைக்கிறது.

சுவாரஸ்ய செய்திகள்...

Via- Rushlane

டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்கள்!

டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Overspeeding Kawasaki Bike Rams Into Parked Car In Pune.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark