ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Saravana Rajan

ஆஸ்திரியாவை சேர்ந்த ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த விபரங்களை கேடிஎம் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

ஆஸ்திரியாவை சேர்ந்த ஹஸ்க்வர்னா பைக் நிறுவனம் கேடிஎம் பைக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய பைக் சந்தையில் பெரும் வெற்றியை ருசித்துவிட்ட கேடிஎம் நிறுவனம் ஹஸ்க்வர்னா பைக் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்தது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

இத்தாலியில் நடந்து வரும் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ஹஸ்க்வர்னா பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த விபரங்களை கேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

தனது பார்ட்னரான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து ஹஸ்க்வர்னா பைக்குகளை இந்தியாவில் உற்பத்தி செய்து, விற்பனை செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள சகன் தொழிற்பேட்டையில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகள் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

அதன்படி, வரும் 2019ம் ஆண்டு இறுதியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆலையில் ஹஸ்க்வர்னா பைக்குகளை அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கப்பட உள்ளன. 2020ம் ஆண்டு துவக்கத்தில், ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

தற்போது கேடிஎம் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 1 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி பிரிவு பஜாஜ் ஆலையில் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, ஹஸ்க்வர்னா பைக்குகளுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி பிரிவு துவங்கப்பட உள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

முதலில் ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் விட்பிலென் 401 மற்றும் ஸ்வார்ட்பிலேன் 401 ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. அதன்பிறகு, பிற பைக் மாடல்களையும் ஹஸ்க்வர்னா விற்பனைக்கு அறிமுகம் செய்யும்.

ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய வருகை பற்றிய விபரம் வெளியானது!

மேற்கண்ட இரு ஹஸ்க்வர்னா பைக் மாடல்களிலும் கேடிஎம் 390 ட்யூக் மற்றும் ஆர்சி பைக்குகளில் பயன்படுத்தப்படும் 375சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

Most Read Articles
English summary
KTM Reveals Launch Details Of Husqvarna Bikes In India.
Story first published: Monday, November 13, 2017, 19:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X