100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

வாகனங்களால் ஏற்படும் மாசு உமிழ்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மாசு உமிழ்வு இல்லா மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து, ஹஸ்க்வர்னா நிறுவனமும் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்க உள்ளது.

100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

இதற்கு முன்னோட்டமாக, தனது முதல் எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடலை ஹஸ்க்வர்னா வெளியிட்டுள்ளது. இ-பிலின் கான்செப்ட் என்ற பெயரில் இந்த புதிய கான்செப்ட் குறிப்பிடப்படுகிறது.

100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

ஹஸ்க்வர்னாவின் பிரபலமான விட்பிலின் மற்றும் ஸ்வர்ட்பிலின் பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய இ-பிலின் கான்செப்ட் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடல்களின் டிசைன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

இந்த நிலையில், அதன் அடிப்படையிலேயே புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலையும் ஹஸ்க்வர்னா கொண்டு வர இருக்கிறது. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் பைக் மாடலுக்குரிய சில தனித்துவமான விஷயங்களுடன் வேறுபடுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

புதிய ஹஸ்க்வர்னா இ பிலின் கான்செப்ட் மாடலில் 8 kW பேட்டரி பயன்படுத்தப்படும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதேநேரத்தில், பேட்டரி மறஅறும் மின் மோட்டார் குறித்த முழுமையானத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

தனது எலெக்ட்ரிக் பைக் மாடல்களில் நிரந்தரமாக பொருத்தப்படும் பேட்டரியை வழங்குவதா அல்லது கழற்றி மாட்டும் வசதியுடன் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து ஹஸ்க்வர்னா நிறுவனம் தீவிர பரிசீலனை செய்து வருகிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக இந்த பைக் மாடல் இருக்கும்.

100 கிமீ ரேஞ்ச்... முதல் மின்சார பைக் கான்செப்ட்டை வெளியிட்டது ஹஸ்க்வர்னா!

புதிய மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக ஹஸ்க்வர்னா தெரிவித்துள்ளது. எனவே, கூடிய விரைவில் தனது மின்சார இருசக்கர வாகனங்களை ஹஸ்க்வர்னா சந்தைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Husqvarna has revealed of its first electric two wheeler model, called as E-Pilen concept.
Story first published: Tuesday, April 27, 2021, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X