மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

Written By:

இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி உள்ள புதிய மாருதி இக்னிஸ் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

தற்போது ஆன்லைனில் இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை மாருதி கார் நிறுவனம் வழங்குகிறது.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

மாருதி கார் நிறுவனத்தின் நெக்ஸா இணையதளத்தின் மூலமாக புதிய இக்னிஸ் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.11,000 முன்பணத்துடன் இந்த காருக்கான முன்பதிவு நடக்கிறது.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

1980 முதல் 1990 வரையில் பிறந்தவர்களை குறிவைத்து க்ராஸ்ஓவர் மாடலாக புதிய மாருதி இக்னிஸ் கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பழமையான டிசைன் தாத்பரியங்கள் நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வருகிறது மாருதி இக்னிஸ் கார்.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பிளாஸ்டிங் கிளாடிங், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது. மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். வசதிகளை பொறுத்து 14 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.89 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.80 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

பியர்ல் ஒயிட், சில்க்கி சில்வர், க்ளிஸ்ட்டனிங் க்ரே, அப்டவுன் ரெட், டின்செல் புளூ மற்றும் அர்பன் புளூ ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் பாதசாரிகளுக்கான விசேஷ பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது.

மாருதி இக்னிஸ் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியது!

வரும் 13ந் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Ahead of the launch of the Maruti Suzuki Ignis, online bookings are open for Rs 11,000.
Story first published: Wednesday, January 4, 2017, 9:22 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos