ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுக்கு குட்பை சொல்லியது ஃபோர்டு நிறுவனம். எனினும், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் எஞ்சின் மாடலை ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் அறிமுகம் செய்வதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் விரைவில் டைட்டானியம் எஸ் மற்றும் சிக்னேச்சர் எடிசன் என்ற இரண்டு புதிய வேரியண்ட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில், டைட்டானியம் எஸ் என்ற வேரியண்ட்டில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த மாடலில் சஸ்பென்ஷன் மிகவும் கடினமாகவும், ஸ்டீயரிங் சிஸ்டம் மிக துல்லியமான ஃபீட்பேக்கை வழங்கும் விதத்தில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

டைட்டானியம் எஸ் வேரியண்ட்டில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 98.5 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, விரைவாகவே அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

இந்த புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ் வேரியண்ட்டில் 17 அங்குல அலாய் வீல்கள், சன்ரூஃப் மற்றும் HID ஹெட்லைட்டுகள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. இதன் க்ரில் அமைப்பில் ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணக் கலவை அலங்காரத்திலும் வர இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

தற்போது விற்பனையில் உள்ள ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டைட்டானியம் ப்ளஸ் என்ற வேரியண்டில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து சிக்னேச்சர் எடிசன் என்ற புதிய மாடலையும் ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த மாடலில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட இருக்கின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

புதிய ரியர் ஸ்பாய்லர், முகப்பு க்ரில் அமைப்பில் கருப்பு வண்ண தகடுகளுடன் அலங்காரம் ஆகியவை இடம்பெற இருக்கிறது. இந்த மாடலில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் கூடுதலாக இருக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் வர இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், இந்த எஞ்சின் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தரும். தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Ford launched the facelifted EcoSport in India in 2017. The new EcoSport was introduced with the new 1.5-litre Dragon Series petrol engine and the turbocharged EcoBoost engine was discontinued. Now, Autocar India reports that Ford is planning to re-introduce the 1-litre EcoBoost engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X