இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள காரை எலெக்ட்ரிக் வடிவில் களமிறக்க மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

உலகில் காற்று அதிகம் மாசடைந்த நாடுகளில் ஒன்று இந்தியா. அதேபோல் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளும் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகின்றன.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் ஒரு சேர தீர்வு காண முடியும். எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை வெகுவாக ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

மத்திய அரசின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் தற்போது விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி கொண்டுதான் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

உதாரணமாக ரேஞ்ச் மிகவும் குறைவாக இருக்கும். அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணம் செய்யும் கிலோ மீட்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகளால், உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு, நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இதற்கு ஒரு உதாரணம். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அத்துடன் ஏராளமான சிறப்பம்சங்களுடன் ஹூண்டாய் கோனா களமிறக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

இந்தியாவில் இனியும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மத்திய அரசு துளியும் விரும்பவில்லை. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக சரிவடைந்து வருகிறது. இதில், பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் மாருதி சுஸுகியும் ஒன்று.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

எனவே அடுத்த சில ஆண்டுகளில் அதிகப்படியான எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன்படி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இதுதான் இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார். இதற்கு அடுத்தபடியாக எர்டிகா எம்பிவி காரின் அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை மாருதி சுஸுகி தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

இதுகுறித்து LiveMint செய்தி வெளியிட்டுள்ளது. வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மாருதி சுஸுகி களமிறக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் காராக இது இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரை தயாரிக்கும் முடிவை மாருதி சுஸுகி எடுத்தால், 2020ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

அதே சமயம் பரிமாணங்கள் அடிப்படையில் பார்த்தால், தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் எர்டிகா காரை காட்டிலும், இந்த புதிய எலெக்ட்ரிக் கார் வித்தியாசமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டால், எம்ஜி இ-இஸட்எஸ் (MG e-ZS) எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் போட்டியிடும்.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

எம்ஜி இ-இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எம்ஜி இஇஸட்-எஸ் மற்றும் எர்டிகா எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு கார்களின் பாடி டிசைனும் வெவ்வேறானது. இரண்டும் வெவ்வேறு செக்மெண்ட்டை சேர்ந்த வாகனங்கள். என்றாலும் விலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

எர்டிகா ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடலாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாகவும் அது உள்ளது. எனவே அதன் அடிப்படையில் எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்பட்டால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் எர்டிகா அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் குறித்து மாருதி சுஸுகி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களுக்கு பிடித்த கார் எலெக்ட்ரிக் ரூபத்தில் களமிறங்குகிறது? மாருதியின் அதிர வைக்கும் திட்டம்!

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா மற்றும் விரைவில் விற்பனைக்கு களமிறங்கவுள்ள எம்ஜி இ-இஸட்எஸ் ஆகிய கார்கள் தவிர மேலும் சில எலெக்ட்ரிக் கார்களும் இந்திய அறிமுகத்திற்கு தயாராக உள்ளன. இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் மற்றும் நிஸான் லீஃப் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Maruti Suzuki To Develop Ertiga-based Electric Car: Will Rival MG e-ZS. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X