ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ஸ்கோடா எஸ்யூவி!

புத்தம் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ஸ்கோடா எஸ்யூவி!

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ரகத்தில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் காம்பேக்ட் எஸ்யூவி காரை சந்தைப்படுத்தி விட்டன. ஹூண்டாய் நிறுவனமும் மிக விரைவில் வெனியூ எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த சூழலில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் புத்தம் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கார்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்திய கார் சந்தையில் மிக முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்கோடா திட்டமிட்டுள்ள புதிய கார் மாடல்களில் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவியும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ஸ்கோடா எஸ்யூவி!

புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவியானது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0-IN என்ற பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி 4 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ஸ்கோடா எஸ்யூவி!

இந்த புதிய எஸ்யூவி மாடலானது 2022ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. அதே ஆண்டு இறுதியில் விற்பனைக்கு களமிறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 2022ம் ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த எஸ்யூவியை களமிறக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஸ்கோடா ஆட்டோ.

இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். 2022ம் ஆண்டில் டீசல் கார்களுக்கான வரவேற்பை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் தேர்வு வழங்கப்படும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ஸ்கோடா எஸ்யூவி!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முத்தாய்ப்பான டிசைன் தாத்பரியங்களுடன் மிக அசத்தலான வடிவமைப்பில் வர இருக்கிறது. பட்டர் ஃப்ளை க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த காரின் வலிமையான, நேர்த்தியான தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ஸ்கோடா எஸ்யூவி!

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற பல ஜாம்பவான் மாடல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சந்தைப் போட்டி மிகுந்த இந்த சந்தையில் இறங்குவதற்கு ஏதுவாக, தனது விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் டீலர் நெட்வொர்க்கை ஸ்கோடா மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா
English summary
According to CarDekho, the new Skoda compact-SUV is expected to be showcased only by 2022 and will be followed by a launch much later. The new Skoda sub-four-metre will be based on the MQB A0-IN platform which will debut with the upcoming Kamiq SUV in the Indian market.
Story first published: Wednesday, May 1, 2019, 9:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X