இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சிட்ரோன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு நேரடி போட்டியாளராக வர இருக்கும் இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் வரும் பிப்ரவரி 1ந் தேதி தனது முதல் கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட தனது சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலை முறைப்படி இந்தியாவில் வெளியிட ஆயத்தமாக உள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

இந்த நிலையில், சிட்ரோன் நிறுவனத்தின் இரண்டாவது மாடல் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை சிட்ரோன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

கடந்த சில மாதங்களாக இந்த எஸ்யூவியின் சாலை சோதனை ஓட்டம் குறித்த ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த புதிய மாடல் வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது போட்டியாளர்களை விட அதிக இடவசதியை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே களமிறக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகிய ஏதேனும் ஒரு எஞ்சின் தேர்வு வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூரில் உள்ள சிகே பிர்லா குழுமத்தின் ஆலையில்தான் இந்த எஸ்யூவி அசெம்பிள் செய்யப்படும்.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

முதல் மாடலாக வரும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. ஆனால், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

மேலும், சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பிரிமீயம் மாடலாக விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டாலும், புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் விலையை போட்டியாளர்களைவிட மிக சவாலாக நிர்ணயிக்க சிட்ரோன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!

சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத் நகரில் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் சிட்ரோன் நிறுவனத்தின் ஷோரூம்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

Via- IAB

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன் #citroen
English summary
According to report, Citroen is planning to launch Sub-Compact SUV in India by around Diwali this year.
Story first published: Monday, January 25, 2021, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X