ரூ36 ஆயிரத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இந்த வாரம் நீங்க தவற விட்டது இதை தான்!

ஆட்டோமொபைல் உலகில் தினம் தோறும் ஏராளமான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்படியாக பல செய்திகள் கடந்த வாரமும் வெளியாகி வைரலாக பரவியது. அதில் சில செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம் படித்திருக்கலாம். ஆனால் சில செய்திகளை தவற விட்டு இருக்கலாம் இப்படியாக நீங்கள் கடந்த வாரம் தவறவிட்ட செய்திகளின் தொகுப்பை தான் இங்கே நாம் காண போகிறோம்.

நடிகர் பிரசாந்துக்கு பிறந்தநாள் பரிசு: நடிகர் பிரசாந்துக்கு பிறந்தநாள் பரிசாக அவரது தந்தை இயக்குனர் தியாகராஜன் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தார். இந்த கார் ரூபாய் 1.63 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனை ஆகி வருகிறது. இவ்வளவு காஸ்டியான காரை இவருடைய தந்தை வாங்கி பரிசளித்த தருணத்தை இங்கே கிளிக் செய்து முழுமையாக படியுங்கள்.

automobile weekly update

ஜேமோபாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை குறைப்பு: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வரும் ஜேமோபாய் என்ற நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி தற்போது ரூபாய் 59,850 முதல் இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி வருகின்றன. எந்தெந்த ஸ்கூட்டர்கள் எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது என்ற விரிவான விபரத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

வந்தே பாரத் வேகம் எடுக்கும்: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல மவுசி இருக்கும் நிலையில் தற்போது மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் வேகத்தை 160 கிலோமீட்டர் வேகமாக உயர்த்துவதற்காக ரயில் தண்டவாளங்களை பலப்படுத்தும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

automobile weekly update

நெக்ஸ்ஜென் எனர்ஜியா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: நெக்ஸ் ஜென் எனர்ஜியா என்ற நிறுவனம் இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவரப் போகிறது. அதன்படி இந்நிறுவனம் ரூபாய் 36,990 என்ற விலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

காருக்குள்ளே நீச்சல் குளம் : தற்போது இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ஹுண்டாய் சான்ட்ரோ காருக்குள்ளே நண்பர்கள் சிலர் சேர்ந்து குட்டியான நீச்சல் குளம் போன்ற ஒரு வடிவமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

automobile weekly update

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனை: மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் தான் கடந்த மார்ச் மாதம் சிறப்பாக விற்பனையான 7 சீட்டர் காராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் இந்த இடத்தை பிடிக்கும். இந்நிலையில் தற்போது எட்டிக்காவை பின்னுக்கு தள்ளி இந்த கார் முதல் எழுத்தை பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

விஜயகாந்த் மகன் பரிசளித்த விலை உயர்ந்த கார்: நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சகோதரர் விஜய பிரபாகரன் ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான போர்ஷே நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்தும் இந்த கார் குறித்தும் விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

அம்பானி மனைவி வாங்கிய கார்: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பாந்தோம் 8 இடபிள்யூபி என்ற காரை சொந்தமாக வாங்கியுள்ளார். ரோஸ் குவார்ட்ஸ் நிறத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த காரின் மதிப்பை பொருத்தவரை ரூபாய் 12 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த கார் சாலையில் வலம் வந்த புகைப்படம் வெளியான நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

நடிகர் வாங்கிய டெஸ்லா கார்: 1980-90களில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகர் மனோஜ் கே ஜெயன் இவர் சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஒன்றே வாங்கி உள்ளார். இங்கிலாந்தில் வசித்து வரும் இவர் இந்த காரை வாங்கி புகைப்படம் எடுத்து பதிவிட்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

மலையாள நடிகரின் வேகன்ஆர் கார்: மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெகதீஷ் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் சாதாரண வேகன்ஆர் காரில் வந்திறங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் எளிமையை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

பஜாஜ் பல்சர் என்250 அறிமுகம்: பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என் 250 பைக்கை இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூ1.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து காணுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 19:16 [IST]
English summary
Automobile weekly update vande bharat speed bajaj pulsar n250 launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X