இந்தியா விடாப்பிடியாக வாங்கும் ரபேல் விமானம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Posted By:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஆர்டர் மூலமாக 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை கருதி, இந்த புதிய போர் விமானங்களை உடனடியாக வாங்குவதற்கு முடிவு செய்ததாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானத்தை வாங்கும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஆர்டரை பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், மத்திய அரசு முழு முனைப்புடன் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த போர் விமானத்தை பற்றிய 30 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. அறிமுகம்

01. அறிமுகம்

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கும் போர் விமானம் இது. கடந்த 2001ம் ஆண்டு நான்காம் தலைமுறை அம்சங்கள் கொண்ட ரபேல் போர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 133 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

02. பன்முக திறன்

02. பன்முக திறன்

வானிலிருந்து தரை தாக்குதல், வானிலிருந்து வான் தாக்குதல், இடைமறித்து தாக்குதல் என ரபேல் போர் விமானங்கள் பன்முக திறன் கொண்டவை.

03. இரட்டை எஞ்சின்

03. இரட்டை எஞ்சின்

ரபேல் போர் விமானத்தில் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

04. அணுசக்தி தாக்குதல்

04. அணுசக்தி தாக்குதல்

ரபேல் போர் விமானங்கள் எதிரி நடமாட்டத்தை கண்காணிப்பது மற்றும் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம் கொண்டது.

05. ஆக்சிஜன் தேவை

05. ஆக்சிஜன் தேவை

பைலட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது.

06. வடிவம்

06. வடிவம்

ரபேல் போர் விமானம் 15.30 மீட்டர் நீளம், 10.90 மீட்டர் அகலம், 5.30 மீட்டர் உயரம் கொண்டது. எதிரியின் ரேடார் கண்களிலிருந்து எளிதாக தப்பும் வகையிலான வடிவைமப்பு அம்சங்களை கொண்டது.

07. ரேடார்

07. ரேடார்

இந்த விமானத்தில் மின்னணு நிகழ்நேர கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதால், வான் தாக்குதல் மற்றும் தரை தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பிச் செல்லும். ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்களில் இந்த ரேடார் கொண்ட ஒரே விமான மாடல் இதுதான்.

08. முப்பரிமான வரைபடம்

08. முப்பரிமான வரைபடம்

இந்த விமானத்தில் முப்பரிமான நிகழ்நேர வரைபடத்தை பெறும் வசதி இருப்பதால், இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும். அனைத்து தட்பவெப்ப நிலையிலும் துல்லியமான வரைபடத்தை பெற முடியும்.

09. ரேஞ்ச்

09. ரேஞ்ச்

ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

10. அதிகபட்ச வேகம்

10. அதிகபட்ச வேகம்

மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது.

11. பயன்பாடு

11. பயன்பாடு

ரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கப்பற்படைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தவிர, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

12. மாடல்கள்

12. மாடல்கள்

மூன்று மாடல்களில் தயாரிக்கப்படுகிறது. ரபேல் சி என்ற சிங்கிள் சீட்டர் மாடலும், ரபேல் பி என்ற 2 சீட்டர் மாடலும் விமானப்படையின் தரை தளங்களிலிருந்து பயன்படுத்தும் வசதியுடனும், ரபேல் எம் என்ற மற்றொரு சிங்கிள் சீட்டர் மாடல் விமானம் தாங்கி கப்பல்களுக்கு ஏற்றதாக தயாரிக்கப்படுகிறது.

13. வித்தியாசம் அதிகம் இல்லை

13. வித்தியாசம் அதிகம் இல்லை

அனைத்தும் ஒரே ஃப்ரேமில்தான் கட்டமைக்கப்படுகிறது. விமானம் தாங்கி கப்பலுக்கான ரபேல் எம் மாடலில் பின்புறத்தில் விமானத்தை குறைவான ரன்வேயில் நிறுத்துவதற்கான கொக்கி கொடுக்கப்பட்டிருக்கும்.

14. ஆர்டர் மதிப்பு

14. ஆர்டர் மதிப்பு

36 ரபேல் போர் விமானங்களை ரூ.24,800 கோடி மதிப்பில் மத்திய அரசு வாங்குகிறது.

15. ரபேல் மோகம்

15. ரபேல் மோகம்

இந்திய விமானப் படையில் ரஷ்யாவின் சுகோய் 30 ரக விமானங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆனால், அவற்றைவிட இந்த நான்காம் தலைமுறை ரபேல் விமானம் கூடுதல் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு ரபேல் விமானம் இரண்டு சுகோய் 30 விமானங்களுக்கு சமமானதாக இருக்கும் என்று விமானப் படை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 16. இந்தியாவுக்கான மாடல்

16. இந்தியாவுக்கான மாடல்

கடந்த 2007ம் ஆண்டு இந்திய விமானப் படையால் சோதிக்கப்பட்ட நான்காம் தலைமுறை ரபேல் போர் விமானங்கள்தான் இப்போது வாங்கப்பட உள்ளன. சோதிக்கப்பட்டபோது இருந்த அதே வசதிகளுடன்தான் வருகிறது. கூடுதல் வசதிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் எதுவும் இருக்காது.

17. ஈடு செய்யுமா?

17. ஈடு செய்யுமா?

அண்டை நாடுகளால் இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க குறைந்தது ரபேலுக்கு இணையான 44 போர் விமானங்கள் தேவைப்படுகிறதாம். இந்த நிலையில், இந்தியா வாங்கும் 36 ரபேல் போர் விமானங்கள் மூலம் நம் நாட்டின் வான் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர்.

18. கால அவகாசம்

18. கால அவகாசம்

அடுத்த இரு ஆண்டுகளில் 36 ரபேல் போர் விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு வாங்கப்படுகிறது.

19. பராமரிப்பு

19. பராமரிப்பு

இந்தியா வாங்கும் 36 போர் விமானங்களை பராமரிப்பு பணிகளை டஸ்ஸால்ட் நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20. விலை

20. விலை

ஒரு விமானத்தின் மதிப்பு ரூ.700 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

 21. கூடுதல் பயிற்சி

21. கூடுதல் பயிற்சி

தற்போது இருக்கும் சுகோய் 30 விமானங்களைவிட ரபேல் விமானங்களை நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இருப்பதால், அவற்றை இயக்குவதற்கு இந்திய விமானப்படை விமானிகளுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

22. ஏன் அவசரம்?

22. ஏன் அவசரம்?

நாட்டின் பாதுகாப்புக்கு கூடுதலாக 42 போர் விமானங்கள் தேவைப்படுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய போர் விமானங்களை வாங்குவதற்கு அவசரம் காட்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் தெரிவிக்கிறது.

 23. எச்ஏஎல் தாமதம்

23. எச்ஏஎல் தாமதம்

ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களை உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றிருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பொதுத்துறை நிறுவனம், உற்பத்தி செய்து தருவதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாகவே, தற்போது பிரான்ஸ் நாட்டிடமிருந்து விமானங்களை வாங்குவதற்கான நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாம்.

 
English summary
Interesting Facts About Rafale Fighter Jet.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark