உலக கவனம் பெறும் சீனாவின் லிஸிபா மோனோ இரயில் நிலையம்

Written By: Azhagar

நல்ல தூக்கத்தில் இருக்கும் உங்களுக்கு இரயிலில் பயணிப்பது போல கனவு வருகிறது, ஏனோ தூக்கத்தின் ஆழத்தில் காண்பது கனவாக தெரியவில்லை. திடீரென்று இரயிலின் சப்தம் அதிகரிக்க, அந்த ஒலியை கண்களை தாண்டி காது, மூக்கு, உடல் என அனைத்திலும் உணர்கீறீர்கள். திடுக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து தலைக்கு பின் பார்த்தால், நிஜமாகவே ஒரு குட்டி இரயில் உங்களை கடந்துசெல்கிறது.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

கனவில் பார்த்த ஒரு காட்சியை நிஜத்தில் உடனே பார்க்க நேர்ந்தால் நாம் சிலிர்ப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம். ஆனால் தென் - கிழக்கு சீனாவில் இருக்கும் சங்க்குயிங் பகுதியின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சர்வ சாதரணமாக இந்த நிலையை கடந்து செல்கின்றனர்.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

சங்க்குயிங் நகரத்தின் லிஸிபா என்ற மோனோ இரயிலின் நிலையமே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் அமைந்துள்ளது. 31000 சதுரடி பரப்பளவில் மலை, நதி என ஒரு மேஜிக் ஃபீலிங்கை தரும் இந்த நகரத்தின் மக்களுக்கு இந்த இரயில் நிலையம் முக்கிய போக்குவரத்தாக உள்ளது.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

19 மாடி அடுக்கத்தின் ஆறு முதல் எட்டாம் தளங்கள் வரை லிஸிபா மோனோ இரயில் நிலையம் அமைந்துள்ளது. இடப்பற்றாக்குறையை போக்கவே இதனை வடிவமைத்த கட்டட பொறியாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பை இடிக்காமல் இந்த இரயில் நிலையத்தை அமைத்துள்ளனர்.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

போகுவரத்து நெரிசலை தவிர்க்க சீனாவின் பெரும்பாலான நகரங்களில் மெட்ரோ இரயில்கள் இயங்கினாலும், மோனோ இரயில்களும் இருக்கின்றன. ஆனால் லிஸிபா பகுதியில் இடப்பற்றக்குறையை போக்க மோனோ இரயில் நிலையத்தை குறுகிய ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்னும் குறுகிய வட்டத்தில் அமைத்திருக்கின்றனர்.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரயில் நிலையமா? என்பது நமக்கு ஆச்சர்யமாக இருப்பதுபோல, அந்த குடியிருப்பு வாசிகளுக்கும் ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். ஆனால் லிஸிபா மோனோ இரயில் நிலையத்தின் சிறப்பே, குறிபிட்ட நிலையத்திற்கு வந்துவிட்டால், அதிலிருந்து ஒலி வராது என்பது தான்.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

ஒலி அதிகரிப்பை குறைக்க, ஒலியை உள்வாங்கிக்கொள்ளும் கருவிகள் லிஸிபா மோனோ இரயில் நிலையத்தின் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ளன. இரயில் நிலையத்திற்கு வரும்போதும், அங்கியிருந்து புறப்படும் போதும், பாத்திரங்களை கழுவும்போது எழக்கூடிய சத்தம் போன்று தான் இரயிலின் நகர்வு நமக்கு கேட்கும்.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

இரயில் நிலையம் தங்களது வீடுகளுக்கு இடையில் அமைக்கப்படுவதை முதலில் அந்த குடியிருப்பு வாசிகள் எதிர்த்திருக்கிறார்கள், ஆனால் இப்படி ஒரு கட்டமைப்பு குறித்து எல்லா தரப்பினரிடமும் எழுந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பை பார்த்ததும், அடுக்குமாடியின் உரிமையாளர்கள் இரயில் நிலைய கட்டுமானத்திற்கு ஒகே சொல்லியிருக்கிறார்கள்.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

கட்டுமான கலை, ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து அமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகிற்கே எடுத்துக்காட்டாக உருவாகியுள்ளது லிஸிபா மோனோ இரயில் நிலையம்.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இதுபோன்ற போக்குவரத்து முன்மாதிரிகள் அமைக்கப்படவேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. தொழில்நுட்ப உலகில் சர்வதேசளவில் முன்னணி நாடாக உள்ள சீனா, போக்குவரத்தை இடம் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு கட்டமைப்பதில் சிறந்து விளங்குகிறது.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

தன் நாட்டிலுள்ள ஜனத்தொகையை கருத்தில்கொண்டு மோனோ இரயில் பயன்பாட்டில் புதிய நிபுணத்துவத்தை செய்து காட்டிய சீனா, அதே மோனோ இரயில் சேவையில் பறக்கும் இரயில் சேவை என்பதை உருவாக்கியுள்ளது.

குடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்

வெற்றிகரமாக மக்களின் பயன்பாட்டில் உள்ள பறக்கும் இரயில் சேவையை இந்தியா போன்ற நாடுகளும் பின்பற்றினால், போக்குவரத்து இடையூறுகள் சற்று குறைந்த அளவில் இருக்கும்.

வாசகர்கள் படித்து வரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்

மெர்சடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி காரின் புதிய புகைப்படத் தொகுப்பை கீழே காணுங்கள்

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Taking the direct route! Train goes through the centre of a 19-storey block of flats in China's 'Mountain City'

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark