தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

மஹிந்திரா மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டின் மோஜோ பைக் மாடல் பிஎஸ்6 அப்டேட்டுடன் விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

மஹிந்திரா க்ரூப்பின் இருசக்கர வாகன பிரிவு மற்ற மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்களுடன் போட்டியிட முடியாமல் போராடி வருகிறது. இதற்கு பல முயற்சிகளை மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டாலும் அவை தோல்வியிலேயே சென்று முடிகின்றன. இருப்பினும் இந்நிறுவனம் முயற்சிகளை விடுவதாக இல்லை.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

இதன்படி தான் மஹிந்திரா மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டின் தனித்துவமான பைக் மாடலான மோஜோ பிஎஸ்6 இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டு விரைவில் சந்தைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது இந்த பிஎஸ்6 பைக்கின் டீசர் படம் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இந்த 300சிசி பைக்கை யுடி300 மற்றும் எக்ஸ்டி300 என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தி வந்தது. இதில் எக்ஸ்டி300 வேரியண்ட் ப்ரீமியம் தரத்தில் பாகங்களை கொண்டிருந்தது. ஆனால் இந்த இரு வேரியண்ட் முறையை கடந்த ஆண்டில் இந்நிறுவனம் நீக்கிவிட்டது.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

அதற்கு பதிலாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன், சிங்கிள் சைலன்சர் மற்றும் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றுடன் ஒரே வேரியண்ட்டாக இந்த பைக் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டாக இதன் வழக்கமான தோற்றத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தை பார்க்கும்போது தெரிய வருகிறது.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

ஆனால் நிச்சயம் மோஜோ பிஎஸ்6 பைக்கில் கூடுதலான கேட்டலிடிக் கன்வெர்டர் சேம்பரை எக்ஸாஸ்ட் குழாய்க்கு அருகே எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில் பொருத்தப்பட்டுவரும் 295சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் ஆனது தற்சமயம் 26.8 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

இதன் உமிழ்வு அப்கிரேட், வெளிப்படுத்தும் ஆற்றல் அளவை குறைக்கலாம். ட்ரான்ஸ்மிஷனிற்கு தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ற 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மோஜோ பைக்கில் வழங்கப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் விலை அதிகரிப்பை பெறவுள்ள புதிய மோஜோ பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.2 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...

மஹிந்திரா மோட்டார்சைக்கிள் ப்ராண்ட்டில் இருந்து தற்போதைக்கு எந்தவொரு புதிய அறிமுகம் குறித்தும் தகவலும் வெளிவரவில்லை. இதனால் ப்ராண்ட்டின் மொத்த சுமையையும் ஒரே ஆளாக மோஜோ மாடல் தான் சுமக்க வேண்டியுள்ளது. அதுவும், பஜாஜ் டோமினார் 400, கேடிஎம் ட்யூக் 200, ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் போன்ற பிரபலமான பைக் மாடல்களை எதிர்த்துக்கொண்டு.

Most Read Articles
மஹிந்திரா மோட்டார்சைக்கிள்

English summary
Mahindra Mojo Teased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X