Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புத்தம் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக் குறித்த இந்தியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!
புத்தம் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் குறித்த ஒரு நல்ல செய்தி இந்தியர்களுக்கு வந்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்தியாவிலும் ட்ரையம்ஃப் நிறுவனத்தின் பிரிமீயம் பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரைடென்ட் 660 என்ற புத்தம் புதிய பைக் மாடலை அண்மையில் ட்ரையம்ஃப் நிறுவனம் உலக அளவில் வெளியிட்டது.

இந்த பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால், பைக் பிரியர்கள் மத்தியில் அதிக ஆவல் இருந்து வருகிறது. தற்போது இந்த பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் குறைவான விலை பிரிமீயம் பைக் மாடலாக வந்தாலும், டிசைனில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இத்தாலியை சேர்ந்த ராடல்ஃபோ பிராஸ்கோலி என்ற பிரபல டிசைனரின் உதவியுடன் இந்த புதிய பைக்கை ட்ரையம்ஃப் பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

ரோட்ஸ்டெர் வகையிலான இந்த புதிய பைக் மாடலில் எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மை ட்ரையம்ஃப் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த பைக்கில் புதிய ட்பியூலர் ஸ்டீல் சேஸீ பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஷோவா மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் இரண்டு நிஸின் காலிபர்களுடன் கூடிய 310 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் நிஸின் காலிபர் கொண்ட சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது. 17 அங்குல சக்கரங்களும், மிச்செலின் ரோடு 5 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கிற்கு 45 பிரத்யேக ஆக்சஸெரீகளையும் ட்ரையம்ஃப் வெளியிட்டுள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 660சிசி எஞ்சின் உள்ளது. இந்த லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியும் உள்ளது. அனைத்து நிலைகளிலும் 90 சதவீத டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் இதன் எஞ்சின் செயல்திறன் இருக்கும் என்று ட்ரையம்ஃப் தெரிவித்துள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கில் ரோடு மற்றும் ரெயின் என்ற இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஆகியவையும் இந்த பைக்கின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கருதலாம்.

புதிய ட்ரையம்ஃப்ட் ட்ரைடென்ட் பைக் சில்வர் ஐஸ்- டயாப்லோ ரெட், மேட் ஜெட் பிளாக் - மேட் சில்வர் ஐஸ், க்றிஸ்ட்டல் ஒயிட் மற்றும் சஃபையர் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக் 189 கிலோ எடை கொண்டது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விலை அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.