மைலேஜ் தருவதில் ஆக்டிவாவை மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்

அதிக மைலேஜை வழங்கும் ஸ்கூட்டர்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

கொரோனா வைரசால் உருவாகியிருக்கும் பின் விளைவுகள் மக்களை ஒரு பக்கம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது என்றால் மற்றொரு பக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில், மக்கள் தலையில் பெரும் பாரத்தை சுமத்தும் விதமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இதனால் மக்கள் மத்தியில் மாற்று வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் மீதே மக்களின் பார்வை திரும்ப ஆரம்பித்துள்ளது. அதேசமயம், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கான கட்டமைப்பு இப்போதுதான் இந்தியாவில் வளரத் தொடங்கியிருக்கின்றது. எனவே, அதிக மைலேஜ் வழங்கும் பட்ஜெட் வாகனங்களின்மீதும் மக்கள் ஒரு கண்ணை வைத்திருக்கின்றனர்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

அவ்வாறு இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா முதல் யமஹா ஃபஸ்ஸினோ வரை அடங்கும். இவற்றின் மைலேஜ் மற்றும் விலை விவரத்தை பின்வருமாறு கீழே காணலாம்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

டிவிஎஸ் என்டார்க்

விலை: ரூ. 67,000 முதல் ரூ. 74,000 வரை

மைலேஜ்: லிட்டர் ஒன்றிற்கு 47 கிமீ

டிவிஎஸ் என்டார்க்தான் நாம் பார்க்கவிருக்கும் இந்த பட்டியலில் கடை நிலை மைலேஜை வழங்கும் ஸ்கூட்டராகும். ஆம் நாம் குறைந்த மைலேஜ் தரும் ஸ்கூட்டரில் இருந்து அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களைக் காணவிருக்கின்றோம்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

எனவேதான் லிட்டர் ஒன்றிற்கு 47கிமீ மைலேஜை வழங்கும் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரை முதலில் பார்க்கின்றோம். இந்த ஸ்கூட்டர் மூன்று விதமான ஃபார்மேட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

அதில், ரேஸ் எடிசன் எனப்படும் ஸ்பெஷல் தயாரிப்பும் அடங்கும். இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 9.4 பிஎச்பி பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 10.5 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹீரோ டெஸ்டினி 125

விலை: ரூ. ரூ. 66,620 முதல் ரூ. 70,367 வரை

மைலேஜ்: லிட்டர் ஒன்றிற்கு 51 கிமீ

ஹீரோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றாக டெஸ்டினி இருக்கின்றது. இது இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, எல்எக்ஸ் மற்றும் விஎக்ஸ் ஆகும். இந்த ஸ்கூட்டர்களில்124.6 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இது அதிகபட்சமாக 9 பிஎச்பி பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 10.4 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் ஃபிரண்ட் டிஸ்க் வேரியண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

சுசுகி அக்சஸ் 125

விலை: ரூ. 64,800 முதல் ரூ. 69,500 வரை

மைலேஜ்: லிட்டர் ஒன்றிற்கு 53 கிமீ

சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் சுசுகி அக்சஸ் மாடலும் ஒன்றும். இதன் அட்டகாசமான ஸ்டைல் மற்றும் எஞ்ஜின் திறனுக்கு புகழ் பெற்ற ஒன்று. இது டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இந்த ஸ்கூட்டரில் 124சிசி திறன் கொண்ட ப்யூவல் இன்ஜெக்சன், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரை 6,750 ஆர்பிஎம்மிலும், 10 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் ஸ்பெஷல் எடிசன் மாடலிலும் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹோண்டா டியோ

விலை: ரூ. 60,542 முதல் ரூ. 63,892 வரை

மைலேஜ்: லிட்டர் ஒன்றிற்கு 55 கிமீ

ஹோண்டா நிறுவனத்தின் மிக பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக டியோ இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரை சமீபத்தில்தான் ஹோண்டா நிறுவனம் புதிய ஸ்டைலுக்கு அப்கிரேட் செய்து அறிமுகப்படுத்தியது. இந்த அப்கிரேஷனில் ஸ்கூட்டருக்கு புதிதாக ரேஸ் தோற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இது தற்போது எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் ஆகிய இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில் டிஎல்எக்ஸ் வேரியண்ட் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட மாடலாக உள்ளது. ஆனால், இரு வேரியண்டிலும் 109.51சிசி திறன் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்படுகின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.76 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 9என்எம் டார்க்கை 4,750 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹோண்டா ஆக்டிவா 125

விலை: ரூ. 68,997, ரூ. 71,542 மற்றும் 75,042 ஆகிய விலைகளில் கிடைக்கின்றது.

மைலேஜ்: லிட்டர் ஒன்றிற்கு 55 கிமீ

இந்தியாவில் பிஎஸ்6 தரத்தில் விற்பனைக்கு வந்த முதல் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் ஆகும். இது அலாய் மற்றும் டீலக்ஸ் ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் டிஸ்க் மற்றும் டிஸ்க் அல்லாத வேரியண்டும் அடங்கும்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் 124சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 8.29 பிஎச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 10.3 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் பழைய மாடலைக் காட்டிலும் 13 சதவீதம் அதிக மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ்

விலை: ரூ. 52,554 முதல் ரூ. 54,131 வரை

மைலேஜ்: லிட்டர் ஒன்றிற்கு 55 கிமீ

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றது. இது தற்போது 2 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 5.43 பிஎச்பியையும், 6.5 என்எம் டார்கையும் வெளிப்படுத்தக் கூடிய 87.8 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

யமஹா ஃபஸ்ஸினோ

விலை: ரூ. 67,230 முதல் ரூ. 69,730 வரை

மைலேஜ்: லிட்டர் ஒன்றிற்கு 58 கிமீ

யமஹா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் இதுவே ஆகும். இந்த ஸ்கூட்டரும் அதன் பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும் அதிக மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதற்கு இதன் எஞ்ஜினில் வழங்கப்பட்டிருக்கும் ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பமே காரணம்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

யமஹா நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் 125சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 9.7 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இது, முந்தைய மாடலைக் காட்டிலும் 16 சதவீதம் அதிக மைலேஜ் வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹீரோ பிளஸ்ஸர் பிளஸ் 110

விலை: ரூ. 55,600

மைலேஜ்: 60 கிமீ

ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் மற்றுமொரு ஃபேமஸான ஸ்கூட்டராக பிளஸ்ஸர் பிளஸ் 110 மாடல் இருக்கின்றது. இதில், 110 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 8.7 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி

விலை: ரூ. 65,419 முதல் ரூ. 68 ஆயிரம் வரை

மைலேஜ்: 60 கிமீ

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் டாப் இடத்தை பல வருடங்களாக பிடித்து வரும் மாடலாக ஹோண்டா ஆக்டிவா உள்ளது. இதன் புதிய தலைமுறையே இந்த 6ஜி மாடல். இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் இரு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவையிரண்டிலும் 109.51 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது, அதிகபட்சமாக 7.6 பிஎச் மற்றும் 8.79 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

டிவிஎஸ் ஜுபிடர்

இந்தியாவின் அதிக மைலேஜை வழங்கும் ஸ்கூட்டர்களில் முதல் இடத்தை டிவிஎஸ் ஜுபிடர் பிடித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் லிட்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக 62 கிமீ மைலேஜ் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இது தற்போது இந்தியாவில் ஸ்டாண்டர்டு, இசட்எக்ஸ் மற்றும் கிளாசிக் ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது பிரிமியம் தரத்திலான ஸ்கூட்டர் என்பதால் சற்று உயர்ந்த விலையைக் கொண்டிருக்கின்றது.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

அதாவது, இந்த ஸ்கூட்டரின் விலையே ரூ. 62,062ஆக உள்ளது. இது ஸ்டாண்டர்டு வேரியண்டின் விலையாகும். இதேபோன்று, இசட்எக்ஸ் மாடலின் விலை ரூ. 64,062ஆகவும், கிளாசிக் மாடலின் விலை ரூ. 68,562 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி திறனை வெளிப்படுத்தும் ப்யூவல் இன்ஜெக்சன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7.4 பிசஎச்பியையும், 8.4 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

மைலேஜ் வழங்குவதில் ஆக்டிவாவையே மிஞ்சிய டிவிஎஸ் ஜுபிடர்! இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

நாம் மேலே பார்த்த அனைத்து மாடல்களும் பிஎஸ்-6 தரத்திலானவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், வாகனங்கள்குறித்த ஆய்வினை மேற்கொள்ளும் அராய் (ARAI) அமைப்பு வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Top 10 Mileage Scooters In India. Read In Tamil.
Story first published: Wednesday, July 22, 2020, 6:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X