அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

அப்டேட் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக புதிய டைகர் 900 பைக்கை அறிமுகப்படுத்த ட்ரையம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரபல டைகர் 800 பைக்கிற்கு மாற்றாக வெளிவரும் இந்த புதிய 900சிசி பைக்கை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

ட்ரையம்ப் நிறுவனம் டைகர் 900 பைக்கை இந்திய சந்தைக்கு சிகேடி முறையில் கொண்டுவரவுள்ளது. எப்படியாவது அடுத்த மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திட வேண்டும் என செயல்பட்டு வரும் இந்நிறுவனம் முன்னதாக நடக்கும் ஏப்ரல் மாதத்தில் இந்த பைக்கை நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தது.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் இந்த திட்டம் தள்ளிப்போனது. இதனால் தான் தற்போது ட்ரையம்ப் நிறுவனம் மே மாதத்தை குறி வைத்துள்ளது. இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் இந்த பைக் அறிமுகமாகவுள்ளது. இதில் இரு டாப் வேரியண்ட்கள் ஆஃப்-ரோடு பையாஸ்டு ரேலி லைன் மற்றும் ரோடு-ஃபோக்கஸ்டு ஜிடி லைன் உள்ளிட்டவை அடங்கும்.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

இதில் முதலாவதாக ஜிடி ப்ரோவும் பிறகு ரேலியும் அறிமுகமாகவுள்ளன. சந்தைக்கு வரும் சிகேடி கிட்ஸ்களை பொருத்து தான் இந்த ஆர்டர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. டைகர் 800 மாடலில் பேஸ் எக்ஸ்ஆர் வேரியண்ட்டிற்கு சந்தையில் தேவை அதிகமாக ஏற்பட்டிருந்தாலும், புதிய டைகர் 900 மாடலில் இந்த பேஸ் வெர்சன் கொண்டு வருவதற்கான எந்த தகவலும் இல்லை.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

இருப்பினும் டைகர் 900 மாடலிலும் இதன் தேவை அதிகரித்தால் இதன் எண்ட்ரீ-லெவல் மாடல் கொண்டுவரப்படும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் முற்றிலும் புதிய டிசைன், சேசிஸ், சஸ்பென்ஷன் மற்றும் என்ஜினுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

இந்த பைக்கில் 888சிசி, இன்லைன்-ட்ரிபிள், 2-சிலிண்டர் என்ஜின், 1-3-2 என்ற ஃபைரிங் ஆர்டரில் ஆஃப்-செட் க்ரான்ங் உடன் உள்ளதால் பைக்கின் சத்தம் வித்தியாசமாக உள்ளது. டைகர் 800 மாடலை விட 2.5 கிலோ குறைவான எடையை கொண்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 93.9 பிஎச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

இந்த புதிய பைக்கின் ஜிடி ப்ரோவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மர்சோச்சி சஸ்பென்ஷன், எலக்ட்ரானிக் டேம்பிங் மற்றும் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடிய பின்புற மோனோஷாக் உடன் உள்ளது. ப்ரேக்கிங்கிற்கு பெரியதாக அப்டேட் செய்யப்பட்ட 320மிமீ டிஸ்க்ஸ் மற்றும் ப்ரெம்போ ஸ்டைல்மா காலிபர்கள் உள்ளன.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

ஜிடி ப்ரோ மற்றும் ரேலி ப்ரோ வேரியண்ட்கள் தற்போது ஐஎம்யூ-அசிஸ்டட் எலக்ட்ரானிக்ஸ், கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் மழை, சாலை, ஸ்போர்ட், ஆஃப்-ரோடு மற்றும் ரைடர் என்ற ரைடிங் மோட்களை பெற்றுள்ளன. ரேலி ப்ரோ மாடலில் கூடுதலாக ஏபிஎஸ் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோலை ஆஃப் செய்து வைக்க முடியும்.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

டைகர் 900 பைக்கின் இந்த இரு ப்ரோ மாடல்களும் ப்ளூடூத் இணைப்புடன் புதியதாக 7.0 இன்ச்சில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இவற்றுடன் ஹீட்டட் இருக்கைகள் மற்றும் ஹீட்டட் க்ரிப்ஸ் போன்றவையும் கிடைக்கும்.

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

ட்ரையம்ப் நிறுவனம் தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் மாடலுக்கு ஏற்ப விலையை புதிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலுக்கு வழங்கியிருந்தது. ஆனால் புதிய டைகர் 900 பைக்கானது தற்போதைய டைகர் 800 பைக்கை விட சற்று கூடுதலான எக்ஸ்ஷோரூம் விலையை பெறவுள்ளது.

Most Read Articles
English summary
Triumph To Launch The All-New Tiger 900 Soon In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X