2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

2022 யமஹா எம்டி15 மோட்டார்சைக்கிள் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

இந்திய சந்தையில் உள்ள மலிவான செயல்திறன்மிக்க பைக்குகளுள் யமஹா எம்டி15 மாடலையும் ஒன்றாக கூறலாம். பிரபலமான ஆர்15 பைக்கின் நாக்டு வெர்சனாக பார்க்கப்படும் இதுதான் விரைவில் புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

இந்த வகையில் 2022 எம்டி15 பைக்கில் கொண்டுவரப்பட உள்ள முக்கியமான அப்டேட்களுள் ஒன்றாக ப்ளூடூத் இணைப்பு வசதியுடனான புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலை எதிர்பார்க்கிறோம். இதன் மூலமாக ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை எம்டி15 பைக்குடன் இணைத்து கொள்ள முடியும்.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

சமீபத்தில், கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்த புதிய தலைமுறை ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்பட்ட இதே மொபைல் போன் இணைப்பு அம்சத்தின் மூலம் டிராக்‌ஷன் கண்ட்ரோல், கியர் பொசிஷன், கியர் மாற்ற நேரம் இண்டிகேட்டர், டிராக்/ஸ்ட்ரீட் மோட், லேப் டைமிங்ஸ், சராசரி மைலேஜ், சராசரி வேகம், என்ஜினின் வெப்ப நிலை உள்ளிட்ட தகவல்களை பெறலாம்.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை இணைப்பதற்கான ஒய்-கனெக்ட் செயலி ஃப்ளே ஸ்டோரில் உள்ளது. இந்த மொபைல் போன் இணைப்பின் மூலமாக மேலும் மொபைல் போன் அழைப்பு எச்சரிக்கை, குறுஞ்செய்தி & இமெயில் அறிவிப்புகள், போனின் பேட்டரியின் சார்ஜ் நிலை மற்றும் செயலி இணைப்பின் நிலை போன்ற விபரங்களையும் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையின் வழியாகவே அறியலாம்.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

இவை மட்டுமின்றி, எரிபொருள் பயன்படுத்தப்படும் அளவு, கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடம், ரெவ்ஸ் டேஸ்போர்டு, பைக்கின் பழுதுகள் அறிவிப்பு, பராமரிப்பு பரிந்துரைகள் மற்றும் பயண வரலாறு முதலியவற்றையும் ஒய்-கனெக்ட் செயலி வாயிலாக ஓட்டுனர் பெற முடியும். இந்த அம்சம் நிச்சயமாக இந்தியாவில் எம்டி15 பைக்கின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

அதுமட்டுமில்லாமல் ஓட்டுனரும் தனது ரைடிங் திறமைகளை மேம்படுத்தி கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட இத்தகைய மொபைல் இணைப்பு வசதிகள் எம்டி15 பைக்கின் விற்பனையை சந்தையில் பெரிய அளவில் அதிகரிக்கும். இது தவிர்த்த, 2022 யமஹா எம்டி15 பைக்கில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற மற்றொரு அப்டேட் என்று பார்த்தால், முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க்குகள் சஸ்பென்ஷன் யூனிட்டை சொல்லலாம்.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

தற்சமயம் எம்டி15 பைக்கில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு நிலையான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளையே யமஹா நிறுவனம் வழங்கி வருகிறது. பின்பக்கத்தில் லின்ங்-வகையிலான மோனோக்ராஸ் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது. யுஎஸ்டி ஃபோர்க்குகள் அதிவேக பயணத்தின்போதும், வளைவுகளில் திரும்பும்போதும் மற்றும் பிரேக் கொடுக்கும்போதும் சிறந்த கண்ட்ரோலிற்கும், ஹேண்ட்லிங்கிற்கும் வழிவகுக்கிறது.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

புதிய ஆர்15 வி4 பைக்கில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கான யுஎஸ்டி ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டு வழங்கப்பட்டு இருந்தன. புதிய எம்டி15 பைக்கில் எவ்வாறு வழங்கப்பட உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவற்றுடன் இரட்டை-சேனல் ஏபிஎஸ் -ஐயும் எம்டி-15 பைக்கில் யமஹா அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

தற்போதைக்கு எம்டி15 பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. பிரேக்கிங் பணியை கவனிக்க 282மிமீ டிஸ்க் முன்பக்கத்திலும், 220மிமீ டிஸ்க் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. எம்டி15 பைக்கில் இரு முனைகளிலும் 17-இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. மெக்கானிக்கல் அப்டேட்களுடன் 2022 எம்டி15 பைக்கில் சில ஸ்டைலிங் அப்டேட்களையும் யமஹா வழங்கலாம்.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

இருப்பினும் தற்போதைய பரிமாண அளவுகளில் இருந்து இந்த யமஹா பைக் பெரியதாக மாறுப்படாது. எம்டி15-இல் இரட்டை-செயல்பாடு எல்இடி ஹெட்லைட்கள், சுற்றிலும் கருப்பு நிற பாகங்கள், செதுக்கப்பட்டது போன்றதான வடிவில் பெட்ரோல் டேங்க், கரடுமுரடான என்ஜின் பாதுகாப்பான், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் மற்றும் நீட்டிக்கப்பட்ட எல்இடி டெயில்லைட் உள்ளிட்டவை ஸ்டைலிங் அம்சங்களாக கொடுக்கப்படுகின்றன.

2022 யமஹா எம்டி15 பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியா?! எப்போது அறிமுகம்?

தற்சமயம் எம்டி15 பைக்கில் 155சிசி, லிக்யூடு-கூல்டு, 4-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.5 பிஎஸ் மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 13.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட அப்டேட்களினால் யமஹா எம்டி15 பைக்கின் விலை ரூ.10 ஆயிரம் வரையில் அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Expected updates in 2022 yamaha mt15 bluetooth connect
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X