அக்டோபர் விற்பனையில் டாப் - 10 கார்களின் பட்டியல்

வழக்கம்போல் பண்டிகை காலத்தின் தாக்கம் கடந்த மாதம் எதிரொலித்தது. இதன்காரணமாக நடப்பு நிதி ஆண்டில் அதிகபட்ச விற்பனையை கார் மார்க்கெட் சந்தித்தது. கடந்த மாதம் 2.29 லட்சம் கார்கள் விற்பனையானது.

பல மாதங்களாக சோதனை கட்டத்தில் இருந்த கார் மார்க்கெட்டுக்கு அக்டோபர் சற்று மூச்சுவிட சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் மார்க்கெட்டில் டாப் - 10 பிடித்த கார் மாடல்களின் விபரங்களையும், டாப் 10 பட்டியலின் போட்டியிலிருந்து திடீரென விலகிய சில மாடல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 ஆல்ட்டோ

ஆல்ட்டோ

மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான ஆல்ட்டோதான் கடந்த மாதமும் நம் நாட்டு மார்க்கெட்டின் நம்பர்- 1. கடந்த மாதம் 22,574 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் விற்பனையுடன் ஒப்பிடும்போது ஆல்ட்டோ விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதம் இரண்டாவது இடத்தை ஸ்விஃப்ட் தக்க வைத்துக்கொண்டது. மொத்தம் 19,047 ஸ்விஃப்ட் கார்கள் அக்டோபரில் விற்பனையாகி மாருதியின் விற்பனை வளர்ச்சிக்கு உதவியது.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

மூன்றாவது இடத்தை மாருதி டிசையர் பெற்றது. அக்டோபரில் 17,211 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர்

வழக்கம்போல் முதல் 4 இடத்தில் மாருதி கார்களின் ஆட்சிமானம் தொடர்கிறது. பட்டியலின் 4வது இடத்தை வேகன் ஆர் பெற்றது. கடந்த மாதம் 14,270 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விறுவிறுவென டாப் 10 பட்டியலில் முன்னேறி வருகிறது. கடந்த மாதம் 11,519 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனஐ செய்தது. இதன்மூலம், பட்டியலில் 5வது இடத்தை வெகு எளிதாக கிராண்ட் ஐ10 பெற்றது.

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ

டாப் 10 பட்டியலில் எனக்கு நிரந்தர இடம் உண்டு என்பதை கடந்த மாதமும் மஹிந்திரா பொலிரோ நிரூபித்தது. கடந்த மாதம் 10,705 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனையாகி பட்டியலில் 6வது இடத்தை பெற்றது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

கடந்த மாதம் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை ஹோண்டா அமேஸ் பதிவு செய்தது. கடந்த மாதம் 9,564 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்தது. பட்டியலில் அமேஸ் 7வது இடத்தை பெற்றது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

கடந்த மாதம் மாருதி எர்டிகா பல படிகள் முன்னேறி 8வது இடத்தை பெற்றது. கடந்த மாதம் 7,224 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்தது.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஹூண்டாயின் சிறிய காரான இயானும் தொடர்ந்து தன்னை டாப் 10 பட்டியலில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. கடந்த மாதம் 6,867 இயான் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்தது.

மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி

மாருதி ஓம்னி திடீரென டாப் -10 பட்டியலுக்குள் அட்டாகசமாக நுழைந்துவிட்டது. கடந்த மாதம் 6,547 ஓம்னி மினி வேன்களை மாருதி விற்பனை செய்தது.

 காணாமல் போன ஐ10

காணாமல் போன ஐ10

டாப் 10 பட்டியலில் நீங்கா இடம் பிடித்து வந்த ஹூண்டாய் ஐ10 கார் தற்போது பட்டியலில் இறுதிக்கட்டத்துக்கு சென்றுவிட்டது. கிராண்ட் ஐ10 வருகையால், ஐ10 கார் விற்பனை மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 3,575 ஐ10 கார்கள் மட்டுமே விற்பனையானது. இருப்பினும், கிராண்ட் ஐ10 விற்பனை சக்கை போடு போடுவதால் ஹூண்டாய் அலட்டிக் கொள்ளவில்லை.

 டஸ்ட்டர்

டஸ்ட்டர்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வந்த டஸ்ட்டர் ஈக்கோஸ்போர்ட் வரவால் விற்பனையில் பின்தங்கிவிட்டது. கடந்த மாதம் 4,657 டஸ்ட்டர் எஸ்யூவிகளை ரெனோ விற்பனை செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் குறைவாகும்.

ஈக்கோஸ்போர்ட்

ஈக்கோஸ்போர்ட்

முன்பதிவில் ஈக்கோஸ்போர்ட் பெரிய எண்ணிக்கை தொட்டிருக்கும் நிலையில், பண்டிகை காலத்தையொட்டி ஈக்கோஸ்போர்ட் விற்பனையில் பெரிய மாற்றங்கள் இல்லை. கடந்த மாதம் 5,113 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை ஃபோர்டு விற்பனை செய்துள்ளது. ஆனால், இதைவிட ஸ்கார்ப்பியோவின் விற்பனை சற்று அதிகம். கடந்த மாதம் 5,230 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்திருக்கிறது.

Most Read Articles
English summary
Here is the top 10 list of cars sold in India during the month of October 2013.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X