புதிய ஹூண்டாய் வெர்னா காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

வரும் 22ந் தேதி புதிய தலைமுறை அம்சங்கள் பொருந்திய ஹூண்டாய் வெர்னா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் 5- ஆம் தலைமுறை மாடலாக வெளிவருகிறது. இந்த கார் இ, இஎக்ஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் முகப்பில் க்ரோம் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வளைவுகளில் கார் திரும்பும்போது வெளிச்சத்தை தரும் வசதியுடன் கூடிய பனி விளக்குகள் போன்றவை இடம்பெற்றிருக்கிறது.

Recommended Video

2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் எல்இடி டெயில் லைட்டுகள், சுறா மீன் துடுப்பு போன்ற ஆன்டென்னா, 16 இன்ச் அளவுடைய டைமண்ட் கட் அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

விலை உயர்ந்த எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜர்கள், சன்ரூஃப், பின்புற பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் மற்றும் எஸ்எக்ஸ் வேரியண்ட்டுகளில் 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். பிற வேரியண்ட்டுகலில் 5 இன்ச் அளவுடைய திரையுடன் கூடிய சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட உள்ளது. எஸ்எக்ஸ் ஆப்ஷனல் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும். சீட் பெல்ட் ப்ரீ டென்ஷனர் பாதுகாப்பு அம்சம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட்டுகளுக்கான மவுண்ட்டும் புதிய வெர்னா காரில் இருக்கிறது. பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமராவும் இடம்பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 121 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் வாய்ந்த பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலில் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த இரு எஞ்சின்களும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் இ மற்றும் இஎக்ஸ் வேரியண்ட்டுகளில் 15 இன்ச் ஸ்டீல் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இஎக்ஸ் வேரிண்ட்டில் 15 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். டாப் வேரியண்ட்டில் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரானது, ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டா உள்ளிட்ட கார்களுடன் நேரடியாக மோத இருக்கிறது.

Most Read Articles
English summary
South Korean automaker Hyundai is all set to launch the next-gen Verna in India on August 22, 2017. Ahead of that TeamBHP has got hold of the official product brochure of the sedan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X