Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 8 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 9 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
உலகம் முழுக்க.. கொரோனவால் 101,396,366 பேர் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரைகளுடன் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500!! ஸ்பை படங்கள் லீக்
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அடுத்த ஆண்டிற்கான பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் காராக புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி உள்ளது. இதற்கு போட்டியாக எம்ஜி நிறுவனம் ஏற்கனவே ஹெக்டர் ப்ளஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திவிட்டது.

மேலும் டாடா மோட்டார்ஸும் ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக கிராவிட்டஸை கொண்டுவர தயாராகி வருகிறது. 2021 எக்ஸ்யூவி500 காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த வருடத்தில் இருந்தே சோதனை செய்து வருகிறது.

இதன் காரணமாக அப்போதில் இருந்தே இந்த புதிய தலைமுறை காரின் ஸ்பை படங்கள் நமக்கு கிடைத்து வருகின்றன. இந்த வகையில் தற்போது டீம்பிஎச்பி செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களில் 2021 எக்ஸ்யூவி500 காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இரட்டை-திரை செட்அப்-ஐ பார்க்க முடிகிறது.

இதில் ஒன்று தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கும் ஆகும். இத்தகைய செட்அப்-ஐ தற்போதைய காலக்கட்டத்து சில பென்ஸ் கார்களில் பார்க்க முடியும்.

இவற்றுடன் இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்ப் ஸ்விட்ச் மற்றும் ரோட்டரி ட்ரைவ் மோட் தேர்ந்தெடுப்பானையும் பெற்றுவரவுள்ளது. புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டி-ஜிடிஐ டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

இவற்றுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படவுள்ளது. புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரும் தற்போதைய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருடன் இணைந்து விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.