மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

பிரதமர் மோடியை மிஞ்சும் வகையில் அரவிந்ஜ் கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

இந்தியாவில் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகள் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மக்களை மின்சார வாகனங்களின் பக்கம் கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து மின்சார வாகன ஊக்குவிப்பு அதி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் அந்நிய செலவாணியைக் குறைக்கும் நோக்கிலும், நாட்டின் சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

குறிப்பாக, பிரமதர் மோடி இந்த விவகாரத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோற்கொண்டு வரும் இந்த முயற்சிகளையே மிஞ்சுகின்ற வகையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

மின்சார வாகனக் கொள்கையில் புதிய சீர்திருத்தங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு செய்திருக்கின்றது. இதுகுறித்து அறிவிப்புதான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கேற்பவே பல்வேறு புதிய மாற்றங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

இதன்படி, ரூ. 1.5 லட்சம் வரை புதிதாக மின்சார வாகனத்தை வாங்குபவர்களுக்கு சலுகையாக வழங்கப்பட இருக்கின்றது. அதாவது, டெல்லியின் புதிய மின்சார வாகன கொள்கையின்கீழ் புதிய மின்சார வாகனத்தை வாங்குபவர்களுக்கு அதன் விலையில் சிறப்பு நிதி சலுகையாக ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்பட இருக்கின்றது. இந்த புதிய விதி மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

புதிய மாற்றத்தால் கிடைக்க இருக்கும் பலன்களை கீழே காணலாம்.

இருசக்கர மின்சார வாகனத்திற்கு ரூ. 30 ஆயிரம்

ஆட்டோ ரிக்ஷாவிற்கு ரூ. 30 ஆயிரம்

இ-ரிக்ஷாவிற்கு ரூ. 30 ஆயிரம்

சிறிய சரக்கு மின்சார வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரம்

நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு ரூ. 1.5 லட்சம்

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

மேற்கூறிய நிதி சலுகை மட்டுமின்றி பதிவு மற்றும் சாலை வரி உள்ளிட்டவற்றிலும் விலக்கு அளிக்கும் வகையில் புதிய மின்சார வாகன கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகையால், புதிதாக மின்சார வாகனத்தை வாங்க இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்ற கூறலாம்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

மேலும், மின்சார வாகனத்தை இஎம்ஐ திட்டத்தின்கீழ் வாங்க இருப்பவர்களுக்கும் சிறப்பு சலுகையாக வட்டித் தொகையில் தள்ளுபடி வழங்கவும் புதிய அறிவிப்பில் வழி வகைச் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்து விட்டு புதிய மின்சார வாகனத்தை வாங்க திட்டமிடுபவர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

தலைநகர் டெல்லியின் சாலையை முழுமையாக மின் வாகனங்களால் அலங்கரிக்கும் நோக்கில் புதிய மாற்றங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக 2.5 ஆண்டுகளாக பல்வேறு நிபுணர்களைக் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவைக் கொண்டு வந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

இந்த புதிய கொள்கை பொருளாதாரத்தை உயர்த்தும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனி மாநில மின்வாகன போர்டு, மின் வாகன ஃபண்ட் மற்றும் மின்வாகன செல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளையும் டெல்லி அரசு முடுக்கிவிட்டுள்ளது.

மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்... மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு!

தற்போது மின் வாகன விற்பனைக்கு தடை கல்லாய் அமைந்திருப்பது அதன் உச்சபட்ச விலையும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததுமே ஆகும். இவற்றை தகர்த்தெறியும் பணியில்தான் டெல்லி அரசு களமிறங்கியிருக்கின்றது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி நடவடிக்கையால் டெல்லியில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறது.

Most Read Articles

English summary
Kejriwal Govt announces Incentives for EVS Upto Rs 1.5 Lakh. Read In Tamil.
Story first published: Friday, August 7, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X